2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கூட்டமைப்பு வசமானது மன்னார் நகரசபை

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் நகர சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமானது. மன்னார் நகர சபையின் தவிசாளர், உப தவிசாளர் தெரிவு, மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம். பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த சபையின் தலைவர் பதவிக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் (ஜெராட்), பொதுஜன பெரமுன உறுப்பினர் செல்வராசா செல்வகுமரன் (டிலான்) ஆகிய இருவரும் முன்மொழியப்பட்டனர்.

இதன்போது 16 உறுப்பினர்களுக்குமிடையில் அவர்களின் பெரும்பான்மையானோரின் கோரிக்கைப்படி இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சி உறுப்பினர் எஸ்.ஆர். குமரேஸ் வாக்களிக்கவில்லை. ஏனைய 15 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

அந்தவகையில், ஏழு வாக்குகளைப் பெற்ற டிலானை ஒரு வாக்கால் வென்று, எட்டு வாக்குகளைப் பெற்று ஜெராட் தவிசாளரானார்.

இதேவேளை, ஜெராட்டின் தலைமையில் இடம்பெற்ற உப தவிசாளர் தெரிவின்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் சூசை செபஸ்ரியன் ஜான்சன், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் ஆகிய இருவரது பெயர்கள் முன்மொழியப்பட்டது.

இதிலும் பெரும்பான்மையான உறுப்பினர்களின் விருப்பான இரகசிய வாக்கெடுப்பில், தமிழர் விடுதலைக்கூட்டணியின் உறுப்பினர்களான எஸ்.ஆர். குமரேஸ், பர்னாந்து ஜோசப் மற்றும் பொதுஜன பெரமுன உறுப்பினர் டிலான் ஆகியோர் வாக்களிக்கவில்லை.ஏனைய 13 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இதன்போது, ஐந்து வாக்குகளைப் பெற்ற நிலாமுதீன் நகுசீனை விட மூன்று வாக்குகள் அதிகமாக எட்டு வாக்குகளைப் பெற்று சூசை செபஸ்ரியன் ஜான்சன் உப தவிசாளரானார்.

குறித்த அமர்வின்போது, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், வட மாகாண சபை உறுப்பினர் பிரிமூஸ் சிறாய்வா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வி னோ நோகராதலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .