2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’சட்டவிரோத செயல்களுக்கு மாணவர்கள் உட்படுத்தப்படுகின்றனர்’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 செப்டெம்பர் 12 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத செயல்களுக்கு மாணவர்கள் உட்படுத்தப்பட்டு வருவதாக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் திருஞானம் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில், பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுதல், ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்தப்படுதல், சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுதல்கள் போன்ற சம்பவங்கள் காணப்படுகின்றன.

இது தொடர்பான விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றபோதும், பின்தங்கிய கிராமங்களில் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.

இந்நிலையில், கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ் உள்ள பாடசாலைகளில் கல்விகற்று வரும் சில மாணவர்கள், சட்டவிரோத மணல் அகழ்வு போன்ற சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவதாக குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

குயின்ரஸ் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன் ஒருவன் முதல் நாள் பரீட்சை எழுதி விட்டு மணல் அகழ்வில் ஈடுபட்ட நிலையில், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தண்டப்பணம் செலுத்தி அதன்பின்னர் மறுநாள் பரீட்சைக்குத் தோற்றவேண்டிய நிலையில், உரிய நேரத்துக்கு பரீட்சை மண்டபத்துக்குள் செல்லாது, ஒரு மணி நேரம் தாமதமாகியே பரீட்சைக்குத் தோற்றியதாவும் குறிப்பிட்டுள்ளதுடன், அவர்களின் எதிர்காலம் தொடர்பில் கணக்கில் கொண்டு, இவ்வாறான சம்பவங்களில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .