2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சிங்களக் குடியேற்றம் குறித்து கலந்துரையாடல்

Editorial   / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன் 

முல்லைதீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருநாட்டுகேணி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமது பூர்வீக காணிகளில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பேரில் சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக, வவுனியா மனித உரிமைகள் அலுவலகத்தில், நேற்று கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்கள்,

“1984ஆம் ஆண்டு காலப் பகுதியில் கடமை புரிந்த அரச அதிபர், இராணுவத்தினரின் கட்டாய பணிப்பின் பேரில்  பல அழிவுகளைச் சந்தித்து தமது பகுதிகளிலிருந்து அன்று வெளியேறியிருந்தோம்.

“பின்னர் 1990ஆம் ஆண்டு மீளகுடியமர்த்தப்பட்டு அதே ஆண்டில் வெளியேற்றபட்டு வேறு இடங்களில் வாழ்ந்து வந்தோம். போர் முடிவுற்று 2012ஆம் ஆண்டு மீளவும் குடியமர்த்தபட்டோம்.

“இந்நிலையில், எமது காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நாம் தயாராகிய நிலையில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தினால் எமது காணிகள் பறிக்கபட்டு சிங்கள மக்கள் குடியேற்றபட்டிருந்தனர்.

“குறிப்பாக ஆமையன்குளம், ஊத்தராயன்குளம், அடையாதான் குளம், கூமாவடிக்குளம், தட்டாமலை,சின்னகுளம், குஞ்சுக்குளம், நாயடிச்சமுறிப்பு. போன்ற பகுதிகளில் வயல்காணி, மேட்டுகாணி என 1,031 ஏக்கர் அளவிலான காணிகள், மகாவலி அபிவிருத்தி திட்டத்தினால் எம்மிடமிருந்து பறிக்கபட்டுள்ளன. இதனால் எமது பொருளாதார நிலை மிகவும் பின்னடைவை நோக்கிசென்றுள்ளது.

“இந்த காணிகள் எமது கிராம மக்களுக்குச் சொந்தமான பேமிற் மற்றும் உறுதிபத்திரங்களை கொண்ட காணிகளாக அமைந்துள்ளது. சட்டவிரோதமான குறித்த காணி சுவிகரிப்பு நடவடிக்கை மூலம் இலங்கையின் நீதி, நியதிசட்டங்கள் மீறப்பட்டுள்ளன.

“எனவே, ஒரு மனித குலம் சந்தித்திருக்காத அத்தனை பேரழிவுகளுக்கும் முகம் கொடுத்த சமூகம் என்ற ரீதியில் அப்பாவி மக்களாகிய எங்களின் குரல்களுக்கு செவிசாய்த்து இன நல்லிணக்கத்தையும், தேசிய ஜக்கியத்தையும் மேலாக விரும்பும் நாம் அமைதியான முறையில் எமது காணிகளை மீளப்பெற்று கொள்வதற்கு அனைவரும்  ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மெற்கொள்ள வேண்டும் என தெரிவித்ததுடன், குறித்த விடயம் தொடர்பாக கடந்த மாதம் 28ஆம் திகதி எமது  மாவட்டச் செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு, எமது கோரிக்கையை அனுப்பிவைத்திருந்தோம்.  

“கோரிக்கை அனுப்பப்பட்டு  14 நாள்கள் கடந்த நிலையிலும் எமக்கான தீர்வுகள் எதுவும் கிடைக்கபெறவில்லை. எனவே அடுத்த கட்டமாக நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் தொடர்பாகவும் சட்ட உதவிகளை பெற்றுக்கொள்ளும் வகையிலும் நேற்றையதினம் வவுனியாவுக்கு வருகை தந்து மனித உரிமை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டோம்” எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X