2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சுன்னாகம் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு

Editorial   / 2017 நவம்பர் 30 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

புன்னாலைக்கட்டுவன் வடக்குப் பகுதியில் உள்ள மணல் விற்பனை செய்யும் நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளைப் பறித்துவிட்டு, அதைக் கேட்கச் சென்ற உரிமையாளர் மீது, கஞ்சா வைத்திருந்தார் எனப் பொய்யான வழக்கு தாக்கல் செய்ததாகக் குற்றஞ்சாட்டி, சுன்னாகம் பொலிஸாருக்கு எதிராக, யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில், நேற்று (29) முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

புன்னாலைக்கட்டுவன் வடக்குப் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரதாசன் சாரங்கன் என்ற நபரே, இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

கடந்த 27ஆம் திகதி, குறித்த நபர் கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, இவரால் நடத்தப்படும் மணல் விற்பனை செய்யும் நிலையத்தில் வைத்து, சுன்னாகம் பொலிஸார், இளைஞன் ஒருவரை தாக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதைத் தடுக்க முயன்ற குறித்த நபரை, பொலிஸார் தகாத வார்த்தைகளால் ஏசியுள்ளனர் எனவும், இதையடுத்து, குறித்த நபர், சம்பவத்தைப் படம் பிடிக்க முயன்றபோது, அவரையும் பொலிஸார் தாக்கியுள்ளனர் எனவும், அத்துடன், அவரது மோட்டார் சைக்கிளைப் பெற்றுச் சென்று, கஞ்சா இருப்பதாகக் கூறி பொய்யான வழக்கு தாக்கல் செய்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, இது தொடர்பில் யாழ். மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்த பாதிக்கப்பட்ட நபர், யாழ். மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X