2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

துரத்தலுக்குப் பயந்து ஓடியவர் விபத்துக்குள்ளானார்

Editorial   / 2018 ஜூன் 28 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

பொலிஸாரின் துரத்தலுக்குப் பயந்து ஓடிய குடும்பஸ்தர் ஒருவர் விபத்துக்குள்ளான நிலையில், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம், மன்னாரில் நேற்று (27) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இராசமாணிக்கம் இராஜேந்திரன் (வயது 54) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

ஜிம்ரோன் நகர் கிராமத்துக்கான உள்ளக வீதியால், குறித்த குடும்பஸ்தர் தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, உள்ளக வீதியில் பதுங்கி நின்ற மன்னார் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த வீதி போக்குவரத்துப் பிரிவு பொலிஸார், அவரை நிறுத்தியுள்ளனர்.

இதன்போது, பொலிஸாரின் சமிஞ்கையைப் பொறுப்படுத்தாத குடும்பஸ்தர், மோட்டார் சைக்கிளை நிறுத்தாது செலுத்திச் சென்றுள்ளார்.

இதையடுத்து, பொலிஸார் அவரை துரத்திச் சென்றபோது,

குடும்பஸ்தர் பயணித்த மோட்டர் சைக்கிள், வீதிக்கரையில் காணப்பட்ட மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

மன்னார் நகர் பகுதியில் உள்ள பிரதான வீதிகளில், போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் போக்குவரத்தை சீர்செய்யாது, உள்ளக வீதிகளில் கடமையில் ஈடுபடுவதவாக, பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .