2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தொழில் வாய்ப்பில்லாமல் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 செப்டெம்பர் 13 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் சுமார் 6,246 பெண் தலைமத்துவக் குடும்பங்க்ளில் அதிகளவான குடும்பங்கள் தொழில் வாய்ப்பின்றியும் வருமானங்கள் இன்றியும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளைக்கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் 42,620க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேறியுள்ள நிலையில், இதில் 6,246 பெண் தலைமைத்துக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

கடந்த கால யுத்தம் காரணமாகவும்ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாகவும் ஏனைய விபத்துக்கள் காரணமாகவும் இதனை விட யுத்த சூழ்நிலையால் பிரிந்து வாழ்வோர், காணாமல்போனோர் எனப் பலதரப்பட்ட வகையில் குடும்பத் தலைவர்களை இழந்த நிலையில் மேற்படி 6,246 குடும்பங்கள் வாழந்து வருகின்றனர். இதில், 5,152 பேர் கணவன்மாரை இழந்த விதவைகளாகக் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

அதாவது, கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் கீழ் 1,914 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின் கீழ் 1,729 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழ் 1,085 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 719 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் மாந்தை கிழக்கில் 462 குடும்பங்களும் வெலிஓயா பிரதேச செயலர் பிரிவின் கீழ் 337 குடும்பங்களுமாக இவ்வாறு 6,246 பெண்தலைமைத்துவக்குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, வீட்டுத் திட்டங்கள், ஏனைய வாழ்வாதாரச் செயற் திட்டங்கள் வழங்கப்படுகின்றபோது, அவற்றை வைத்து கணிசமான குடும்பங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியிருக்கின்றார்கள்.

இருந்தபோதும், சில குடும்பங்கள் வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன எனவும் இவ்வாறான குடும்பங்கள் நுண்கடன் நிதி நிறுவனங்களை நாடி கடன்களைப் பெற்று அவற்றை அதிக வட்டியுடன் செலுத்துவதில் பெரும் துன்பங்களை எதிர்கொள்வதாக, மாவட்டத்திலுள்ள பெண்களுக்கான அமைப்புக்கள், சிவில் சமுக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .