2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நிரந்தர வீடுகள் இன்றி 11 ஆயிரம் குடும்பங்கள்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 பெப்ரவரி 13 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்டகாலமாக, தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறிய குடும்பங்களுக்கு பல்வேறு திட்டங்களினூடாக வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இருந்தபோதும், தற்போது சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்க வேண்டிய தேவையுள்ளதாக மாவட்டச்செயலக புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய 4 பிரதேச செயலர் பிரிவுகளிலும் இவ்வாறு நிரந்தர வீடுகள் இன்றி 11ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வெய்யில், மழை காலங்களில் சிரமங்களை எதிர்நோக்குவதுடன், பல்வேறு நோய் மற்றும் விசஜந்துகளின் தாக்கங்களையும் எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர். எனவே, தமக்கு வீட்டுத்திட்டங்களைப் பெற்றுத்தர  நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X