2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நிலைமைகளை ஆராய கிளிநொச்சிக்கு விரைந்தார் பிரதியமைச்சர்

Editorial   / 2018 ஜூலை 10 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சியில் போக்குவரத்து தொடர்பான நிலைமைகளை நேரில்  கண்டறிய,  போக்குவரத்து மற்றும் சிவில் விமான  போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக்  அபயசிங்க  கிளிநொச்சிக்கு இன்று (10) விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, கிளிநொச்சியில் உள்ள தும்புணி விகாரை சென்று வழிபாட்டில் மேற்கொண்டார். அதன் பின்னர் கிளிநொச்சி அரச பஸ் நிலையத்துக்குச் சென்று, அரச பஸ் நிலையத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நிலைமைகளை கேட்டறிந்து கொண்டார்.

தொடர்ந்து கிளிநொச்சி ரயில் நிலையத்தையும்  பார்வையிட்ட பிரதியமைச்சர் ரயில் நிலையத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்ட பிரதியமைச்சர், கிளிநொச்சியில் உள்ள ரயில் வீதியில் போடப்பட்டிருக்கும் சமிஞ்கைகள் தொடர்பாகவும்  கேட்டறிந்து கொண்டார்.

தொடர்ந்து, கிளிநொச்சி - உதயநகர் பகுதியில், கிளிநொச்சி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அலுவலகம் பிரதியமைச்சரால் திறந்து வைக்கப்பட்டதுடன்,  பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் விஜயராஜன் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X