2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘புலிகளால் நாட்டப்பட்ட தேக்க மரங்கள் தறிக்கப்படுகின்றன’

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - பன்றிக்கெய்தகுளம் பகுதியில் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தால் நாட்டப்பட்ட பயன் தரும் பல தேக்கம் மரங்கள்  வன இலகா திணைக்களத்தினரால் கனரக வாகனங்கள் எடுத்துவரப்பட்டு தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று  பன்றிக்கெய்தகுளம், ஆறுமுகத்தான்புதுக்குளம் கிராம அலுவலகர் பிரிவிலுள்ள மரையடித்தகுளம் இந்தியன் வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள இரண்டு ஏக்கர் பாரிய தேக்கம் காட்டுக்குள் சென்ற வன இலகா திணைக்கள உத்தியோகத்தர்கள் பாரிய தேக்கம் மரங்களைத் தறித்து வருகின்றனர். 

பன்றிக்கெய்தகுளம் பகுதியில் 20 முதல் 30 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டப்பட்டு பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தினால் பராமரிக்கப்பட்டு வந்த பயன் தரும் பல தேக்கம் மரங்களே, இவ்வாறு  அங்கிருந்து வன இலகா திணைக்களத்தினால் தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன.

இதையடுத்து, அப்பகுதியில் ஒன்றிணைந்த பொதுமக்கள் வன இலகாவினரிடம் இது குறித்து கேட்டபோது, வன இலகா திணைக்களத்திற்குச் சொந்தமான பகுதியிலுள்ள தேக்கம் மரங்களே, இவ்வாறு தறிக்கப்பட்டு வருகின்றன.

பெரிய மரங்கள் தறிக்கப்பட்டு புதிய மரங்கள் நாட்டுவதற்காகவே பழைய மரங்கள் இவ்வாறு தறிக்கப்பட்டு வருவதாக அங்கு சென்ற வன இலாகா திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .