2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பெரும் ஆளணி வெற்றிடம்

Editorial   / 2018 ஜூன் 11 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில், 23ஆயிரம் மக்களுக்கு ஒரு பொதுச்சுகாதார பரிசோதகர் என்ற அடிப்படையில் பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையாற்றி வருவதாக, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வாழ்கின்ற மக்கள் தொகைக்கு ஏற்ப எண்ணாயிரம் பேருக்கு ஒரு பொது சுகாதாரப் பரிசோதகர் என்ற அடிப்படையில் சேவையாற்ற வேண்டிய நிலையில், மாவட்டத்தில் 23 ஆயிரம் பேருக்கு ஒரு சுகாதார பரிசோதகர் என்ற அடிப்படையில் கடமையாற்றி வருகின்றனர் என்றும் இதுபோன்று ஏனைய மருத்துவத்துறைகளிலும் பெரும் ஆளணி வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .