2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மன்னாரில் புதிய பஸ் நிலையம் நிர்மாணிக்க நடவடிக்கை

Editorial   / 2018 ஜூலை 04 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நகரில், அரச, தனியார் பஸ் நிலையங்களை ஒன்றிணைத்து, புதிய பஸ் நிலையமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த மன்னார் நகர சபைத் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், அதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

மன்னார் நகர சபையில், இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

மன்னார் நகர சபையின் வேண்டுகோளுக்கு அமைவாக, நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக, இலங்கை நகர அபிவிருத்தித் திட்டத்தின் சுமார் 250 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிட்டின் கீழ், இந்தப் புதிய பஸ் நிலையம் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெவித்த அவர்,

இவ்வாறு நிர்மாணிக்கப்படவுள்ள புதிய பஸ் நிலையமானது, மிகவும் அழகான முறையில் காட்சியளிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்தப் பஸ் நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தாரர்களையும் எமக்கு அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், இன்னும் சில தினங்களில், அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், நகரத் திட்டமிடல் பணிப்பாளரால், குறித்த பஸ் நிலையத்துக்கான வரைபடம் தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், குறித்த பஸ் நிலையம் அமைப்பதற்கான நிதியானது, நகர அபிவிருத்தித் திட்டத்தினூடாகவே பெற்றுக்கொள்ளப்பட்டதே தவிர, வேறு எந்த அமைச்சினூடாகவோ அல்லது அமைச்சர்கள் ஊடாகவோ பெற்றுக்கொள்ளப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X