2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மன்னார் பிரதேச சபை ஐக்கிய தேசியக்கட்சியின் வசம்

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் பிரதேச சபையை ஐக்கியதேசியக்கட்சி கைப்பற்றியுள்ளது.

மன்னார் பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று (10) இடம்பெற்றன.

இதன்போது, ஐக்கிய தேசியக்கட்சி எஸ்.எச்.முஜாஹிரையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொன்சஸ் குலாஸையும் முன்மொழிந்தனர்.

இதன்போது, பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதனையடுத்து, ஐக்கிய தேசியக்கட்சி 11 வாக்குகளையும், கூட்டமைப்பு 10 வாக்குகளையும் பெற்றது.

இதனையடுத்து உப தலைவர் தெரிவின் போது, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.இஸ்ஸதீனையும் மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி எம்.தர்சீனையும் முன்மொழிந்தனர்.

அனைவரும் பகிரங்க வாக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 11 வாக்குகளையும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி 9 வாக்குகளையும் பெற்றது.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஜே.இன்சாப்   வாக்களிக்காது நடுநிலை வகித்தார்.

அதி கூடிய வாக்குகளை பெற்ற சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம். இஸ்ஸதீன் மன்னார் பிரதேச சபையின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .