2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வங்காலை கடற்கரையில் இடம்பெற்ற கரையோரத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

ஜனாதிபதியின் சிந்தனைக்கமைவாக  பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய கரையோரக் கடல் வளங்களைப் பேணும் வாரமும், கரையோரத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டமும் நேற்று (18),  மன்னாரில் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 இந்த நிலையில் வங்காலை கடற்கரையில் வங்காலை மீனவர்கள்,கடற்படை அதிகாரிகள் மறும் மாவட்ட கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை , பிரதேச சபை, மேற்கு கிராம அலுவலகர், ஆகியோர் இணைந்து இன்று (19) காலை வங்காலை கடற்கரையில் கரையோரத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .