2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘வீட்டுக்குப் போடும் புள்ளடி எங்களைப் புதைப்பதற்கான ஆணை’

Editorial   / 2018 ஜனவரி 07 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

“வீட்டுக்குப் போடும் புள்ளிடியென்பது, நாங்கள் எங்களைக் குழிதோண்டிப் புதைப்பதற்கான ஆணையென்பதேயாகும்” என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில், கிடாச்சூரி வட்டாரத்தில் போட்டியிடும் அ. அருந்தவராசாவை ஆதரித்து, நேற்று (06) இடம்பெற்ற கூட்டத்திலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடரந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களுக்குச் சரியான தீர்வு வேண்டும் என்பதற்காக, தமிழ் மக்களாகிய நீங்கள், உங்கள் உடமைகளையும் உறவுகளையும் இழந்திருக்கின்றீர்கள். ஆனால், இன்று அதையெல்லாம் மூட்டை கட்டிவைத்து விட்டு, சுமந்திரன் என்ற நபருக்கு வடக்கு, கிழக்கைப் பற்றி, போராட்டத்தைப் பற்றி, அதன் வலிகளைப் பற்றி என்ன தெரியும்?

“கொழும்பில் பிறந்து வளர்ந்து, கொழும்பில் படித்து, கொழும்பில் உத்தியோகம் பார்த்த ஒருவருக்கு, இந்த வலிகள் புரியுமா என்பதை நீங்கள் எண்ணிப்பாருங்கள். அதன் காரணமாகத்தான், அவரது செயற்பாடுகள் தமிழர்களுக்கு விரோதமாக இருக்கின்றன.

“அவர் தற்போது கூறுகின்றார், 'இடைக்கால அறிக்கையில் நாம், அரைவாசித் தூரம் போய்விட்டோம்; மிகுதி அரைவாசித் தூரம் போகவேண்டுமாக இருந்தால், நீங்கள் எங்களுக்கு ஆணை தரவேண்டும்' என்கிறார். அது, இல்லாத ஒன்றுக்கான ஆணை. இடைக்கால அறிக்கை என்பது, தமிழ் மக்களைக் குழிதோண்டி புதைக்கக்கூடிய விடயம் என்பதைப் புரிந்துகொண்டு அதற்கு ஆணை கேட்கின்றார்” எனத் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X