2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வீதிப் பிரச்சினை: பொலிஸில் முறைப்பாடு

Editorial   / 2018 ஜூன் 30 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள 01ஆம் வட்டாரம் உலகளந்த பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள 25 குடும்பங்களுக்குஇ வீதிப் பிரச்சினை காணப்படுவதாகஇ புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வாழும் 25 குடும்பங்களும்இ ஆலய வளாகத்துக்கு அருகில் உள்ள வீதியால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயணம் மேற்கொண்டுவரும் நிலையில்இ ஆலய நிர்வாகம் குறித்த வீதியை மறித்து ஆலய வளாகம் என்று எல்லைபோட்டி வேலி அடைத்துள்ளார்கள்.

இந்நிலையில் குறித்த பகுதியில் வசிக்கும் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மக்கள் வெளியில் சென்று வருவதற்கு ஏற்ற வீதியை பெற்றுத்தருமாறுஇ புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களிடம் முறையிட்டும்இ அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில்இ ஆலய நிர்வாகம் வீதியை மூடி வேலியடைத்துள்ளது.

இதையடுத்தேஇ அப்பகுதி மக்கள்இ கடந்த 26ஆம் திகதியன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.

இதற்கமையஇ புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த ஆலய நிர்வாகத்திடம் வேலி அடைக்க வேண்டாம் எனவும் மக்கள் போக்குவரத்து பகுதியாக காணப்படும் குறித்த பகுதியை அடைப்பதை நிறுத்துமாறும் பணித்துள்ளார்கள்.

இந்நிலையில் ஆலய நிர்வாகம்இ மக்கள் போக்குவரத்துக்கு அற்ற குளம் அமைந்துள்ள பகுதியைஇ போக்குவரத்துக்குப் பயன்படுத்துமாறு தெரிவித்துள்ளது.

தங்கள் வீதிபோக்குவரத்து தொடர்பில் அக்களைகொள்ளாத அரச அதிகாரிகளின் செயற்பாட்டை கண்டித்துஇ வடமாகாண முதலமைச்சர் மற்றம் வடமாகாண ஆளுநர் மற்றும் மனிதஉரிமை ஆணைக்கழு ஆகியவற்றில் முறையிடவுள்ளதாகஇ மக்கள் தெரிவித்துள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .