2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வீதி சீரின்மையால் பாடசாலை செல்வதில் பாரிய சிரமம்

Editorial   / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு கல்வி வலயத்துக்கு உட்பட்ட குமுழமுனை கிராமத்தில் உள்ள குமுழமுனை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் வீதி சீரின்மையால் பாடசாலை செல்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின்  தண்ணீரூற்று, குமுழமுனை ஊடாக அளம்பில் செல்லும் சுமார் 20 கிலோமீற்றர் ரையிலான வீதியில் குறிப்பிட்ட சில பகுதிகளே செப்பனிடப்பட்டுள்ள நிலையில் ஏனைய வீதிகள் குன்றும் குழியுமாக இன்றும் காணப்படுகின்றன. தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரிடம் இது தொடர்பில் தெரியப்படுத்தியும் இதுவரை இந்த வீதி செப்பனிடப்படவில்லை என, மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை, குறித்த வீதியால் முறிப்பில் இருந்தும் தங்கபுரம் கிராமங்களில் இருந்தும் குமுழமுனை மகா வித்தியாலயத்துக்கு மாணவர்கள் பாடசாலை சென்றுவருவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

அத்துடன், குமுழமுனை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் 60 சதவீதமான ஆசிரியர்கள் வெளி பிரதேசங்களில் இருந்தே வருகை தருவதாகவும் அதிலும் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் அதிகளவில் காணப்படுகின்றார்கள் இவர்கள் குறித்த வீதியால் பயணிப்பதில் பல்வேறு சிரமங்கள் எதிர்கொள்கின்றார்கள்.

குறித்த வீதி இதுவரை திருத்தப்படாத காரணத்தால் குமுழமுனை மகாவித்தியாலய மாணவர்களுக்கான பாடசாலை பேருந்து சேவையினைக்கூட பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்படுகின்றது.

பாடசாலை மாணவர்களின் நலன் கருதி பஸ் சேவை ஒன்றினை வழங்க பல்வேறு தரப்பினரிடமும் பாடசாலை நிர்வாகம் கோரிக்கை முன்வைத்த நிலையில் வீதிப் பிரச்சினையை அவர்கள் காரணம் காட்டிவருகின்றார்கள். என, குமுழமுனை மகா வித்தியாலய அதிபர் ஜெயவீரசிங்கம் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .