2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வவுனியாவில் முதியோருக்கான கௌரவிப்பும் மருத்துவ முகாமும்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 09 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

வவுனியா மாவட்டத்திலுள்ள முதியோர்களை கௌரவிக்கும் நிகழ்வும் அவர்களுக்கான மருத்துவ முகாமும் நாளை சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு வைத்திய கலாநிதி கந்தையா இராமச்சந்திரன் தலைமையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

வவுனியா மாவட்ட முதியோர் சங்கமும்  வடமாகாண சமூக சேவைகள் திணைக்களமும் அரிமாக் கழகங்களுடன்  இணைந்து முதியோர் கௌரவிப்பு நிகழ்வையும் அவர்களுக்கான மருத்துவ முகாமையும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பில் தெரிவித்த வவுனியா மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகஸ்த்தர் எஸ்.ஸ்ரீனிவாசன்,

பல்வேறு வகையிலும் சமூகத்திற்கு பங்களிப்பு செலுத்திய முதியோர்களை கௌரவிக்கும் நிகழ்வையொட்டி வவுனியா அல் - இக்பால் மாணவர்களின் 'முதியோர் இல்லத்தில் ஒருநாள் நகைச்சுவை'  நாடகமும் முதியவர்களினதும் பாடசாலை மாணவர்களினதும் கலை நிகழ்வுகளும் 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' என்ற தலைப்பில் வயோதிபர்களின் பசுமை நினைவுகளை பாடல்களாகவும் கதைகளாகவும் நடைபெறவுள்ளன.

சமூகத்தொண்டு புரிந்துவரும் மூத்தோர்களுக்கான  கௌரவிப்பு நிகழ்வு, முதியோர்களுக்கான மருத்துவ முகாமும்; நீரழிவு நோய் பற்றிய வைத்திய நிபுணர்களின் ஆலோசனையுடன் கூடிய வழிகாட்டலும் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் எம்.கே.பந்துல ஹரிச்சந்திரவும் கௌரவ விருந்தினர்களாக வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி நளாயினி இன்பராஜ்,   வவுனியா பிரதேச செயலாளா அ.சிவபாலசுந்தரன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் நா.கமலதாசன், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் எம்.எஸ்.ஜானக, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபர் எம்.எஸ் பத்மநாதன்  ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .