2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக பேரணி

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து மன்னாரில் இன்று வியாழக்கிழமை பிரசாரமும் எதிர்ப்புப் பேரணியும்  நடைபெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட பெண்கள் உரிமைக்கான செயற்பாட்டுக் குழுவினர் இணைந்து பிரசாரத்தையும் எதிர்ப்புப் பேரணியையும்  மேற்கொண்டுள்ளனர்.

மன்னார் அரச பஸ் வண்டித் தரிப்பிடத்தில்  பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கக் கோரி பெண்கள் உரிமைக்கான செயற்பாட்டுக் குழுவினர் தயாரித்த மகஜர் வாசிக்கப்பட்டு அந்த மகஜர் இங்கு வருகை தந்த மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு கையளிக்கப்பட்டன.

இதன்போது, மன்னார் மாவட்டத்தில் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் பதிவுகளாக மீட்கப்பட்ட பெண்களின் 'ஆடைகள்' காட்சிப்படுத்தப்பட்டன.

இதன் பின்னர் இங்கு  பெண்களுக்கு எதிரான வன்முறைகளைச் சுட்டிக்காட்டி வீதி நாடகமும் நடைபெற்றது.

இறுதியாக மன்னார் அரச பஸ் நிலையத்திலிருந்து எதிர்ப்புப் பேரணி ஆரம்பமாகி மன்னார் வைத்தியசாலை சந்தியைச் சென்றடைந்தது.

இதில்  பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை அடிகளார், மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மகாலட்சுமி குருசாந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .