2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

25 கடைகளுக்கு பூட்டு; 7 வர்த்தகர்கள் பாதிப்பு

Editorial   / 2018 ஜூலை 07 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – பூநகரிப் பிரதேசத்துக்கான பொதுச்சந்தை, ​பஸ் நிலையம் என்பன உரிய இடத்தில் உரிய முறையில் அமைக்கப்படாததால், இன்று பல மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கடைகளும் பஸ் நிலையமும் பயன்பாடற்ற கட்டடங்களாக காணப்படுகின்றன.

பூநகரிப் பிரதேசத்தில், மீள்குடியேற்றத்தின் பின்னர் நெல்சீப் திட்டத்தின் கீழ், 18.7 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொதுச்சந்தை வளாகத்தில் 25க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டநிலையில், பஸ் நிலையமும் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகிறது.

இதனால், இங்கே வர்த்தக நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகின்ற ஏழு வரையான வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இங்கே காணப்படுகின்ற பஸ் நிலையத்தில் பஸ்கள் தரித்துச்செல்லாத நிலையும் பஸ்களுக்காக பயணிகள் காத்திருக்காத நிலையும் காணப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .