2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: மார்ச் 17

Menaka Mookandi   / 2016 மார்ச் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

624: பத்ர் சமரில், முஹம்மது நபிகள் நாயகம் தலைமையிலான மதீனா முஸ்லிம்கள், மக்காவின் குராயிஸ்களை தோற்கடித்தனர்.

1805: இத்தாலிய குடியரசு, நெப்போலியனை மன்னனாகக் கொண்டு இத்தாலிய ராச்சியமாகியது.

1845: இறப்பர் பாண்ட்டிற்கு காப்புரிமை வழங்கப்பட்டது.

1891: ஜிப்ரால்டர் வளைகுடாவில் இரு கப்பல்கள் மோதிக்கொண்டதால் 562 பேர் பலி.

1957: பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற விமான விபத்தில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோமன் மக்சேசே  உட்பட 25 பேர் பலி.

1959: திபெத்திலிருந்து 14 ஆவது தலாய் லாமா டென்ஸின் கியாட்ஸோ இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.

1969: இத்தாலியின் முதல் பெண் பிரதமராக கோல்ட்டா மேயர் பதவியேற்றார்.

1969: வியட்நாம் யுத்தத்தில் 'மை லாய் படுகொலைகள்' தொடர்பான தகவல்களை மறைத்தமைக்காக அமெரிக்க இராணுவத்தின் 14 உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.

1988: கம்போடிய விமான விபத்தில் 143 பேர் பலி.

1992: ஆர்ஜென்டீனாவில் இஸ்ரேலிய தூதரகம் மீது கார் குண்டுத் தாக்குதல் 242 பேர் பலி.

1996: உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி  சம்பியனாகியது

2000: உகண்டாவில் மத அமைப்பொன்றின் தூண்டுதலில் சுமார் 800 பேர் இறந்தனர். இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சபொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.

2003: பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார அமைச்சர் ரொபின் குக், ஈராக் மீதான படையெடுப்பை அடுத்து ராஜினாமா செய்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .