2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: மார்ச் 31

Menaka Mookandi   / 2016 மார்ச் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1492: ஸ்பெயினில் இருந்து அனைத்து 150,000 யூதர்களும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவை இசபெல்லா மாகாராணி பிறப்பித்தார்.

1866: சிலியின் வல்பரைஸோ துறைமுகம் மீது ஸ்பானிய கடற்படை தாக்குதல் நடத்தியது.

1885: இலங்கையில் தமிழ், சிங்கள, இஸ்லாமிய வருடப் பிறப்பு நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டது.

1889: பாரிஸ் நகரில் ஈபிள் கோபுரம் திறந்துவைக்கப்பட்டது.

1909: பொஸ்னியா மற்றும் ஹேர்ஸகோவினா பிராந்தியத்தை ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதை சேர்பியா ஏற்றுக்கொண்டது.

1917: டானிஷ் மேற்கிந்தியத் தீவுகளை டென்மார்க்கிடமிருந்து 25 மில்லியன் டொலருக்கு வாங்கிய அமெரிக்கா அதை வேர்ஜின் தீவுகள் என பெயர்மாற்றம் செய்தது.

1918: அஸர்பைஜனர் சிவில் யுத்தத்தில் 3000 இற்கு அதிகமானோர் பலியாகினர்.

1921: ரோயல் அவுஸ்திரேலிய கடற்படை ஸ்தாபிக்கப்பட்டது.

1931: நிக்கரகுவாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுமார் 2000  பேர் பலியாகினர்.

1959: 14 ஆவது தலாய் லாமா டென்ஸின் கயாட்ஸோ திபெத்திலிருந்து இந்தியாவுக்கு தப்பிச்சென்றார்.

1966: சோவியத் யூனியனின் லூனா 10 விண்காலம், சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைந்த முதலாவது விண்கலமாகியது.

1990: இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.

2004: கூகிள் 1 ஜிகா பைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயிலை அறிவித்தது.

2007: முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X