2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: மார்ச் 04

Super User   / 2011 மார்ச் 04 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1665: இரண்டாவது ஆங்கில- டச்சு யுத்தம் ஆரம்பமாகியது.

1797: முதலாவது அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டனிடமிருந்து இரண்டாவது ஜனாதிபதி ஜோன் அடம்ஸுக்கு அதிகாரம் கையளிக்கப்பட்டது. நவீன யுகத்தில் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களுக்கிடையில் அமைதியான முறையில் அதிகாரம் பரிமாற்றப்பட்ட முதல் சந்தர்பப்ம் இதுவாகும்.

1861: ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார்.

பிரிட்டனில் முதலாவது இலத்திரனியல் ட்ராம் வண்டிகள் அறிமுகமாகின.

1975: பிரித்தானிய நகைச்சுவை நடிகர் சார்ளி சாப்ளினுக்கு பிரித்தானிய அரசாங்கத்தினால் சேர் பட்டம் வழங்கப்பட்டது.

1977: கிழக்கு ஐரோப்பாவில் பூகம்பத்தால் 1500 இற்கும் அதிகமானோர் பலி.

1980: ஸிம்பாப்வேயில் ரொபர்ட் முகாபே முதலாவது கறுப்பின ஜனாதிபதியானார்.

1991: ஈராக்கிய ஆக்கிரமிப்பின் பின்னர் நாட்டைவிட்டு வெளியேறிய குவைத் பிரதமர் அல் சலீம் அல் சபாஹ் தாயகம் திரும்பினார்.

2009: சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவிறாந்து (ஐ.சி.சி.) பிறப்பித்தது. பதவியிலுள்ள நாடொன்றின் தலைவருக்கு எதிராக ஐ.சி.சி. பிடிவிறாந்து பிறப்பித்தமை இதுவே முதல் தடவை.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .