2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 07

Super User   / 2010 ஒக்டோபர் 06 , பி.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

336: பாப்பரசர் மார்க் காலமானார்.


1916: அமெரிக்காவில் கால்பந்தாட்டப் போட்டியொன்றில் கம்பர்லாண்ட் பல்கலைக்கழக அணியை ஜோர்ஜியா டெக் அணி 220 - 0 விகிதத்தில் தோற்கடித்தது. அமெரிக்க கல்லூரிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட வரலாற்றில் மிகவும் ஒருபக்கச்சார்பான போட்டி இது.
 

1985: பலஸ்தீன தீவிரவாதிகள், இத்தாலிய உல்லாசப் கப்பலான அச்செல் லோராவை 420 பயணிகளுடன் மத்தியத்தரைக் கடலில் வைத்து கடத்தினர். இஸ்ரேலிய சிறைகளிலுள்ள தமது சகாக்கள் 50 பேரை விடுவிக்குமாறு அவர்கள் கோரினர்.


1919: நெதர்லாந்தின் கே.எல்.எம். விமான சேவை ஆரம்பம். தனது ஆரம்பப் பெயருடன் இன்னும் இயங்கும் மிகப் பழைமையான விமான சேவை இது.


1920: சுவால்கி உடன்படிக்கையில் போலந்தும் லிதுவேனியாவும் கையெழுத்திட்டன.


1933: 5 விமான சேவை நிறுவனங்களை இணைத்து எயார் பிரான்ஸ் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.
1949: ஜேர்மன் ஜனநாயக குடியரசு (கிழக்கு ஜேர்மனி) ஸ்தாபிக்கப்பட்டது.
 

1958: பாகிஸ்தானில் ஜெனரல் அயூப்கானின் உதவியுடன் ஜனாதிபதி ஸ்கந்தர் மிர்ஸா, அரசியலமைப்பை இடைநிறுத்தி இராணுவ சட்டத்தைப் பிறப்பித்தார்.


1959: சோவியத் யூனியனின் 'லூனா-3' விண்கலம் பூமியிலுள்ளவர்களுக்குத் தென்படாத, சந்திரனின் மறுபக்கத்தை படம்பிடித்தது.
 

1960: ஐ.நா. சபையில் நைஜீரியா இணைந்தது.
 

1971: ஐ.நா. சபையில் ஓமான் இணைந்தது.


2001 ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் ஆரம்பம். இந்த யுத்தம் 9 வருடங்களாக இன்னும் தொடர்கிறது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .