2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 09

Super User   / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1760: ரஷ்ய படைகள் பேர்லின் நகரை கைப்பற்றின.

1799: 240 பேருடன் எச்.எம்.எஸ். லட்டின் கப்பல் கடலில் மூழ்கியது.

1806: பிரான்ஸுக்கு எதிராக பிரஷ்யா யுத்தப் பிரகடனம்.

1812: அமெரிக்கப் படையினரால் இரு பிரித்தானிய கப்பல்கள் கைப்பற்றப்பட்டன.

1824: கொஸ்டாரிக்காவில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டது.

1911: சீனாவின் ஹான்காவ் நகரில் தற்செயலாக வெடித்த குண்டொன்று சீனாவின் கிங் வம்ச ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வழிவகுத்தது.

1934: யூகோஸ்லாவிய மன்னர் அலெக்ஸாண்டர் -1 பிரான்ஸின் மார்செய்லே நகரில் வைத்து படுகொலைசெய்யப்பட்டார்.
 

1941: ஜேர்மன் விமானங்கள் இரவு நேரத்தில் லண்டன் நகரம் மீது குண்டுத்தாக்குதல் நடத்தின.

1962: உகண்டா சுதந்திரம் பெற்றது.

1963: இத்தாலியில் ஏற்பட்ட மண்சரிவில் 2000 பேர் பலி.

1967: பொலிவிய படையினரால் மார்க்ஷிச புரட்சியாளர் சே குவேரா கைது செய்யப்பட்டதற்கு மறுநாள்  சுட்டுக்கொல்லப்பட்டார்.

1983: தென்கொரிய ஜனாதிபதி சுன் டூ ஹ்வானை பர்மாவில் வைத்து குண்டுத்தாக்குதல் மூலம் படுகொலை செய்ய முயற்சி. இதில் ஜனாதிபதி ஹ்வான் தப்பினார். எனினும் 22 பேர் கொல்லப்பட்டனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X