2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: நவம்பர் 18

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1307: சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த வில்லியம் டெல் என்பவர் தனது மகனின் தலையில் வைக்கப்பட்ட அப்பிளை துப்பாக்கியால் சுட்டார்.

1421: நெதர்லாந்தில் ஸுய்டர்ஸீ எனும் இடத்தில் கடலிலிருந்து பாதுகாப்பதற்காக கட்டப்பட்டிருந்த மதில் உடைந்ததால் 72 கிராமங்களில் கடல்நீர் புகுந்து சுமார் 10 ஆயிரம் பேர் பலி.

1493: கிறிஸ்டோபர் கொலம்பஸ் பியூர்ட்டோ ரிக்கோ தீவை முதல் தடவையாக கண்டார்.

1809: வங்காள விரிகுடாவில் கிழக்கிந்திய கம்பனியின் படைகளை பிரெஞ்சு படைகள்     தோற்கடித்தன.

1903: அமெரிக்கா கனடாவில் ஆயிரக்கணக்கான இருந்த நேர வலயங்களுக்குப் பதிலாக 5 நேர வலயங்கள் ஏற்படுத்தப்பட்டன.

1905:
டென்மார்க் இளவரசர் கார்ல், நோர்வேயின் 7 ஆம் ஹக்கோன் மன்னரானார்.

1918: ரஷ்யாவிலிருந்து லத்வியா சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1926: ஜோர்ஜ் பேர்னாட்ஸா தனது நோபல் பரிசுப் பணத்தை பெற்றுக்கொள்ள மறுத்தார்.

1943: இரண்டாம் உலக யுத்தத்தில் பேர்லின் நகர் மீது பிரிட்டனின் 440 விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் 131 பேர் கொல்லப்பட்டனர். பிரிட்டன் 9 விமானங்களையும் 53 படையினரையும் இழந்தது.

1945: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினம். 

1947: நியூஸிலாந்தில் கடைத்தொகுதியொன்றில் தீவிபத்து ஏற்பட்டதில் 41 பேர் பலி.

1961: அமெரிக்க ஜனாதிபதி கென்னடி 18 ஆயிரம் இராணுவ ஆலோசகர்களை வியட்நாமுக்கு அனுப்பினார்.

1963: பொத்தான் இலக்கங்களை கொண்ட தொலைபேசிகள் சேவைக்கு வந்தன.

1978: கயானாவில் மதநிலையமொன்றின் அறிவுறுத்தல் காரணமாக 270 சிறார்கள் உட்பட 900 பேர் கூட்டாக தற்கொலை.

1987: லண்டனில் பாதாள ரயில் நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 31 பேர் பலி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .