2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 22

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1885: இட்டோ ஹிரோபுமி எனும் சாமுராய் வீரர் ஜப்பானிய பிரதமரானார்.

1942:வி-2 ரக ரொக்ட்டுகளை ஆயுதமாக வடிவமைக்கும்படி அடோல்வ் ஹிட்லர் உத்தரவிட்டார்.

1944: பெல்ஜியத்தின் பஸ்டோன்ஜ் நகரில் அமெரிக்கத் துருப்புகளை சரணடையுமாறு ஜேர்மனிய துருப்புகள் கோரின.

1963: உல்லாசப் பயணக் கப்பலான லோகோனியா  போர்த்துக்கலுக்குச் சொந்தமான மடேரியா தீவுக்கருகில் தீப்பற்றியதால் 128 பேர் பலி.

1965: 30 வருடங்களின் பின் பேர்லினின் பிரண்டன்பர்க் நுழைவாயில் திறக்கப்பட்டதன் மூலம் கிழக்கு, மேற்கு ஜேர்மனிகளின் பிரிவிணை முடிவுக்கு வந்தது.

2001: ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக பதவி வகித்த புர்ஹானனுதீன் ரபானி, ஜனாதிபதி ஹமீட் கர்ஸாயிடம் அதிகாரத்தை கையளித்தார்.

2001: அமெரிக்கன்  எயார்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணியான ரிச்சர்ட் ரீட் என்பவர் தனது பாதணிக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டை வெடிக்க வைக்க முயன்றபோது மடக்கிப்பிடிக்கப்பட்டார்.

2010: அமெரிக்க பாதுகாப்புப் படைகளில் ஓரின சேர்க்கையாளர்கள் சேவையாற்றுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கும் ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கையெழுத்திட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X