2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று பெப்ரவரி 26

Super User   / 2011 பெப்ரவரி 25 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1658: டென்மார்க் - நோர்வே கூட்டு ராஜ்ஜியத்தின் மன்னர் சுவீடனுடான போரில் தோல்வியுற்றதால் தனது நாட்டின் அரைப் பகுதியை சுவீடனுக்கு விட்டுக்கொடுத்து எஞ்சிய பகுதியை காப்பாற்றிக் கொண்டார்.

1814: பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்டு, இத்தாலியின் எல்பா தீவில் வைக்கப்பட்டிருந்த பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் அங்கிருந்து தப்பி பிரான்ஸை வந்தடைந்தான்.

1952: பிரிட்டனிடம் அணுகுண்டு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அறிவித்தார்.

1960: இத்தாலிய விமானமொன்று விபத்துக்குள்ளானதால் அதிலிருந்த 52 பயணிகளில் 34 பேர் பலி.

1968: பிரிட்டனில் வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 21 நோயாளிகள் பலி.

1972: அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் அணைக்கட்டு உடைந்ததால் 125 பேர் பலி.

1984: 2 வருடங்களுக்கு முன் லெபனானுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க படையினர் அங்கிருந்து வாபஸ் பெற்றனர்.

1991: குவைத்தை ஆக்கிரமித்திருந்த ஈராக் படைகள் அங்கிருந்து வாபஸ் பெற்றன.

2001: ஆப்கானிஸ்தானின் பாமியான் நகரிலிருந்த இரு பாரிய புத்தர் சிலைகளை தலிபான்கள் அழித்தனர்.

2004: மசிடோனியா ஜனாதிபதி போரிஸ் ட்ரஜ்கோவ்ஸ்கி, விமான விபத்தொன்றில் பலியானார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X