2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: நவம்பர் 3

Super User   / 2010 நவம்பர் 03 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1493: கிறிஸ்டோபர் கொலம்பஸ் கரிபியன் கடலில் டொமினிக்கா தீவை முதல் தடவையாகக் கண்டார்.

1903: அமெரிக்காவின் தூண்டுதலோடு கொலம்பியாவிலிருந்து பனாமா தனிநாடாகப் பிரிந்தது.

1913: அமெரிக்காவில் வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டது.

1918: ரஷ்யாவிலிருந்து போலந்து சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1957: ஸ்புட்னிக்2 விண்கலம் மூலம் லைகா எனும் நாயை சோவியத் விண்வெளிக்கு அனுப்பியது. பூமியிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் உயிரினம் இது.

1978: பிரிட்டனிடமிருந்து டொமினிக்கா சுதந்திரம் பெற்றது.

1982: ஆப்கானிஸ்தான் சுரங்க தீவிபத்தில் 2000 பேர் பலி.

1988: மாலைதீவில் ஜனாதிபதி அப்துல் கையூமின் அரசாங்கத்தைக் கவிழ்க்க இலங்கை தமிழ் ஆயுதபாணிகள் முயற்சி. இச்சதிமுயற்சி இந்திய படைகளின் உதவியுடன்; முறியடிக்கப்பட்டது.

2007: பாகிஸ்தானில் ஜனாதிபதி பர்வேஸ் முஸாரவ் அரசியலமைப்பை இரத்துச்செய்து பிரதம நீதியரசரை நீக்கி அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தினார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .