2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஏப்ரல் 5

Super User   / 2011 ஏப்ரல் 04 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1792: அமெரிக்கா ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டன் சட்டமூலமொன்றின் மீது தனது வீட்டோ அதிகாரத்தை பிரயோகப்படுத்தினார். அமெரிக்காவில் இந்த அதிகாரம் பயன்படுத்தப்பட்டமை இதுவே முதல்தடவையாகும்.

1879: பொலிவியா, பெருவுக்கு எதிராக சிலி போர் தொடுத்தது.

1930: இந்தியாவில் பிரித்தானியரின் சட்டத்தை மீறி மகாத்மா காந்தி உப்பு தயாரிக்கும் போராட்டத்தை ஆரம்பித்தார்.

1932: பின்லாந்தில் மதுபான தடை நீக்கப்பட்டது.

1942: 2 ஆம் உலக யுத்தத்தின்போது ஜப்பானிய கடற்படை விமானங்கள் கொழும்பில் குண்டுவீசின். இதன்போது பிரித்தானிய கடற்படை கப்பல்களான எம்.எம்.எஸ். கோர்ன்வால், எச்.எம்.எஸ் டோர்சென்ஷயர் ஆகியன மூழ்கடிக்கப்பட்டன.

1955: பிரிட்டனில் பிரதமர் பதவியிலிருந்து வின்ஸடன் சர்ச்சில் ராஜினாமா.

1956: கியூப ஜனாதிபதிக்கு எதிராக பிடெல் காஸ்ட்ரோ போர் பிரகடனம்.

1956: எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க இலங்கையின் பிரதமரானார்.

1971: சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான  ஐக்கிய முன்னணி  அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கிளர்ச்சியை ஆரம்பித்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X