2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: நவம்பர் 8

Super User   / 2010 நவம்பர் 08 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1520: சுவீடன் மீது படையெடுத்த டென்மார்க் படையினர் ஸ்டொக்ஹோமில் சுமார் 100  பேரை கொலை செய்தனர்.

1923: ஜேர்மன் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு அடோல்வ் ஹிட்லர் தலைமையிலான நாஸிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியுற்றது.

1932: பிராங்ளின் டி ரூஸ்வெல்ட் அமெரிக்க ஜனாதிபதியாக முதல் தடவையாக தெரிவானார். பின்னர் மேலும் 3 தடவைகள் இவர் வெற்றிபெற்று சாதனை படைத்தார்.

1939: ஜேர்மன் சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லர் படுகொலை முயற்சியிலிருந்து நூலிழையில் தப்பினார்.

1950: கொரிய யுத்தத்தின்போது அமெரிக்க விமானப்படையின் எவ்-80 ரக விமானத்தின் விமானி ரஸல் ஜே.பிரவுன், வடகொரியாவின் இரு மிக் 15 விமானங்களை சுட்டுவீழ்த்தினார். உலகில் விமானங்களுக்கிடையிலான நேரடி சமர் இதுவாகும்.

1963: எட்வர்ட் புரூக் என்பவர் அமெரிக்க செனட் சபைக்கு முதல் தடவையாக கறுப்பினத்தவரானார்.

2004: ஈராக்கின் பலூஜா நகரின் மீது சுமார் 10 ஆயிரம் பேர்கொண்ட அமெரிக்க படை தாக்குதலை ஆரம்பித்தது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X