2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இந்தவார பலன்கள் (11.11.2012 - 17.11.2012)

Menaka Mookandi   / 2012 நவம்பர் 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தவார பலன்கள் (11.11.2012 - 17.11.2012)

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தன்னை சார்ந்தவர்களுடன் ஒழிவு மறைவின்றி பழகும் வெண்மையான உள்ளம் கொண்ட மேட ராசி அன்பாகளே...!

மகிழ்ச்சியான  செய்திகள் வந்துசேரும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் உண்டாகுதல். இடையிடயே மனமும் சஞ்சலம் அலைச்சல்கள் உண்டாகும். பணத்திற்கு தட்டுப்பாடுகள் காணப்படும். உண்ணும் உணவில் வெறுப்பு ஏற்பட்டு வயிற்றில் பாதிப்பு உண்டாகும். மருத்துவ செலவுகள் காணப்படும். வயது மூத்தோர்களின் அசீர்வாதம் கிடைக்கும்;. மற்றும் மகான்களின் தரிசனங்கள் கிடைக்கும். இசையில் ஆர்வம் உண்டாகும். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். வெளியூர் செல்லும் சூழ்நிலை உருவாகும். இந்த வாரம் உங்களுக்கு சுமாராகவே காணப்படும்.
அதிர்ஷ்ட திகதி: 17
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, சிகப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி



கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிஷம் 1௨ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் வாழ்வில் வெற்றியை பெற்றுக்கொள்ளும் இடப ராசி அன்பர்களே...!

இந்த வாரம் குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும். மற்றும் நல்லவர்களின் சேர்க்கைகள் கிடைக்கும். மனம் அமைதியடைதல் ஆச்சரியமான பொருள்களைக் காணும் சூழல் உருவாகலாம். வியாபாரத்தில் இலாபங்கள் ஏற்படும். பணத்திற்கு சில வகையில் பிரச்சினைகள் காணப்படும். மேலும் முயற்சி செய்தால் காரியங்கள் அனைத்திலும் வெற்றியடையலாம். மற்றும் வேண்டாத பேச்சுக்களால் பிரச்சினைகள் உண்டாகும். எனவே வார்த்தைகளை கவனத்துடன் பிரயோகிப்பது அவசியம். அலைச்சல்கள் உண்டாகும் செய்யும் செயல்களில் சில தவறுகள் தோன்றும். மேலும் உடலில் தலைவலி காணப்படும். இதனால் உடலில் சோர்வு உண்டாகும் மனதில் பயம் தோன்றும். வியாபாரம் சம்மந்தமாக வெளியூர் செல்லும் நிலை ஏற்படலாம். எனவே கவனத்துடன் இருப்பது அவசியம்.
அதிர்ஷ்ட திகதி: 17
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, சிகப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே...!           

இந்த வாரம் நல்லவர்களின் சேர்க்கை மற்றும் சகோதரர் சகோதரிகளின் வருகை இதனால் மகிழ்ச்சி உண்டாகும். நல்ல தூக்கம் கிடைக்கும். இசையில் ஆர்வம் அதிகரிக்கும் அதனால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். மனதளவில் கஷ்டங்கள் தோன்றும். மற்றும் வீணான சிரமங்கள் உண்டாகும். மேலும் மயக்கம் மற்றும் பதட்டநிலை காணப்படும். மேலும் பொன் பொருள் ஆகியவைகளின் சேர்க்கை நடைபெறும். வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்தி வியாபாரத்தில் அதிக லாபங்களை அடையலாம். சுவையான மற்றும் இனிமையான உணவுகள் மற்றும் இல்லத்தில் உள்ள பெண்களினால் மகிழ்ச்சி உண்டாகும். மேலும் முயற்சி செய்தால் காரியங்களில் வெற்றி பெறலாம்.
அதிர்ஷ்ட திகதி: 29
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

மென்மையான சுபாவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும் உள்ளம் கொண்ட கடக ராசி அன்பர்களே...!

இந்த வாரம்; பெரியோர்களின் சந்திப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்தி வெற்றி காண்பீர்கள். சுற்றத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையினால் மகிழ்ச்சி நிலவும். வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உயர் அதிகாரிகளை சந்தித்து பேட்டி காணுதல். மற்றும் காரியத்தில் சாதனை அடைதல் ஆகியவைகள் நடைபெறும். மற்றும் தீயவர்களின் நட்புகளினால்; நஷ்டம் ஏற்படும். சிலவிதமான சிக்கல்கள் வேண்டாத பேச்சுக்களால் மனஸ்தாபங்கள் தோன்றும். எனவே வேண்டாத வாய் வார்த்தைகளால் சில விதமான பிரச்சினைகளை சந்திக்க நேரும். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும். திருடர்களினால் பயம் உண்டாகும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். மனதில் குழப்பம் காணப்படும். துக்கம் உண்டாகும். பெண்களுடன் வீணான விவாதங்கள் உண்டாகும். இதனால் பிரச்சினை மற்றும்  துன்பம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திகதி: 17
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, சிகப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுகொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட  சிம்ம ராசி அன்பர்களே...!

இந்த வாரம் உங்களுக்கு வீண் அலைச்சல்கள் உண்டாகும். செயல்களினால் சிறு தவறுகள் தோன்றும். முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே தழுவும் மனதில் துக்கங்கள் தோன்றும். மற்றும் பிறருடைய உதவிகளை எதிர்பார்க்கும் சூழ்நிலைகள் உருவாகலாம். இதனால் வீணான மனக்கஷ்டங்கள் தோன்றும். மேலும் உடலில் சிறு சிறு உபாதைகள் காணப்படும். மேலும் வியாபாரம் சம்மந்தமாக செய்யும் முயற்சிகள் அனைத்தும் தடைபடும். தீய நட்பினால்  தேவையில்லாத நஷ்டங்கள் உண்டாகும். இதனால் குடும்பத்தில் சிலவிதமான சிக்கல்கள் உண்டாகும். பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் ஈடுபடும் நிலை உருவாகும். செலவுகள் அதிகமாகும். மற்றும் மகான்களின் தரிசனங்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திகதி: 16
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்


 
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தான் செய்யும் எந்த காரியத்திலும் வாய்மையும் முன்னுரிமையும் பெற எண்ணும் கன்னி ராசி அன்பர்களே...!

இந்த வாரம் உங்களுக்கு நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும். நல்ல உணவுகள் கிடைக்கும். பெண்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும். மனம் அமைதியடையும். நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி வகைகள் கிடைக்கும் நல்லவர்களுடைய சேர்க்கை மகிழ்ச்சியைக் கொடுக்கும். மேலும் வியாபாரத்தில் விருத்தி ஏற்பட்டு தனலாபங்களை அடைவீர்கள். மகிழ்சிக்காக  செலவுகளை செய்வீர்கள்;. திருடர்களினால் பயம் உண்டாகும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். பணதட்டுப்பாடு ஏற்படும். இதனால் அலைச்சலகள் உண்டாகும். வேண்டாதவர்கள் மற்றும் தீயவர்களின் நட்புகளின் மூலமாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படக்கூடும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்



சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

தேடி சென்று உதவிடும் குணமும் முடிவுகளை பராது முன்னேற்றத்திற்காக முழு மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே...!    

இந்த வாரம் வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். மேல் அதிகாரிகளுடன் நல்ல சுமூகமான உறவுகள் காணப்படும். தனலாபம் உண்டாகும். அரசினரால் ஆதாயங்கள் கிடைக்கும். காரியத்தில் வெற்றி உண்டாகும். இன்பமான செலவுகள் மற்றும் சுற்றத்தினர் நண்பர்களின் வருகை ஏற்படும். மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். மனதில் குழப்பங்கள் தோன்றும் துக்கம் நிலவும். மற்றவர்களினால் பிரச்சினை உண்டாகும். பிறரிடம் உதவியை நாடுதல். வீண் மனஸ்தாபங்கள் காணப்படும். உடலில் உஷ்ணம் ஏற்பட்டு காய்ச்சல் தலைவலி ஆகியவை காணப்படும்.
அதிர்ஷ்ட திகதி: 16
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்



விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடயவர்களே எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்ச்சிக ராசி அன்பர்களே...!                                 


இந்த வாரம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும் இதனால் இலாபமடையும் சூழல் உண்டாகும். பொழுது போக்கு சம்மந்தப்பட்டவைகளில் செலவிடுதல். பொன், பொருள் சேர்க்கை ஆகியவை கிடைக்கும். காரியங்கள் தடைபடுதல் மற்றும் வியாபாரத்தில் பிரச்சினை ஏற்பட்டு பகை உண்டாகும். எனவே கவனத்துடன் இருப்பது. அவசியமாகும். சாப்பாட்டில் வெறுப்பு காணப்படும். உயர் அதிகாரிகளை சந்தித்து பேட்டி காணும் சூழ்நிலைகள்; நிலவும். வீணான அலைச்சல்கள் உண்டாகும். தவிர்க்க முடியாத சில வீண் செலவுகள் காணப்படும். வீண் பேச்சுக்களால் பிரச்சினைகள் வேண்டாத அலைச்சல் உண்டாகும். எனவே கவனத்துடன் இருப்பது. அவசியமாகும்.
அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்



மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...!

இந்த வாரம் அரசாங்கத்தினரால் நடைபெறும் காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக முடியும். வெற்றி உண்டாகும். நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி வகைகள் கிடைக்கும். வியாபாரம் சம்மந்தமாக வெளியூர் செல்லும் நிலை ஏற்படும். மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். மற்றும் வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்தி வெற்றி காண்பீர்கள்.  வியாபாரம் விருத்தியடையும் தனலாபம் உண்டாகும். உடலில் சிறு சிறு உபாதைகள் காணப்படும். எனவே பிறருடைய உதவியை எதிர்பார்க்க வேண்டிவரும். வீணான மனக்கஷ்டங்கள் தோன்றும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். வேண்டாத பேச்சுகளால் மனசங்கடங்கள் உருவாகும். எனவே வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும். எதிலும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியமாகும். 
அதிர்ஷ்ட திகதி: 17
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, சிகப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி


உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அவனின்றி ஒரு அனுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே...!

இந்த வாரம் காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும். இதனால் தனலாபம் உண்டாகும். அரசினரால் ஆதாயம் கிடைக்கும். நல்ல இனிமையான உறக்கம் கிடைக்கும். மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும். முயற்சி செய்தால் காரியங்களில் வெற்றிகள் கிடைக்கும். மற்றும் குடும்பத்தில் உள்ள பெண்களி;டமிருந்து சில உதவிகள் கிடைக்கும்.   வயது மூத்தவர்களின் சந்திப்புகள் மற்றும் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். மகிழ்ச்சியான வாரம் இது.
அதிர்ஷ்ட திகதி: 17
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, சிகப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி



அவிட்டம் 3, 4, சதயம் பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பறம் இன்றி வாழ விரும்பும் கும்ப ராசி அன்பர்களே.

இந்த வாரம் நல்லவர்களின் சேர்;க்கை மற்றும் நல்லகாரியங்கள் செய்வதற்கு வழிகள் கிடைக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். மேலும் மகான்களின் தரிசனம் கிடைக்கும்.  ஆசிர்வாதங்கள் கிடைக்கும் பிரயாணங்களினால் இலாபங்கள் உண்டாகும். குடும்பத்தினருடன்  வெளியிடங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். மனதளவில் அலைச்சல்கள் உருவாகும். முயற்சி செய்தால் காரியங்களில் வெற்றி பெறலாம். எனவே முயற்சி செய்வது அவசியமாகும். அவ்வப்போது செய்யும் செயல்களில் சிறு சிறு தவறுகள் காணப்படும். இதனால் வீண் அலைச்சல்கள் காணப்படும் கவனத்துடன் செயல்படுவது அவசியமாகும்.
அதிர்ஷ்ட திகதி: 17
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, சிகப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி



பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி; முடிய ஆக 9-பாதங்கள்.

தனக்கென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயல்படும் பரந்த உள்ளம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே...!  

இந்த வாரம் முயற்சியில் தோல்வியான நிலை உண்டாகும். மனதில் துக்கம் காணப்படும். வேண்டாத உணவுகளினால் பிரச்சினைகள் உண்டாகும். இதனால் வீண் வேலை நிமித்தமாக இடமாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வழிகளை கையாண்டு வியாபாரத்தை பெருக்கிக் கொள்வீர்கள். இதனால் இலாபங்கள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை உருவாகும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கவனத்துடன் இருப்பது அவசியமாகும். வியாபாரத்தில் கவனத்துடன் செயல்படவில்லையெனில் சில விதமான நஷ்டங்களை சந்திக்க நேரிடும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். எனவே மகிழ்ச்சியடைவீர்கள். புண்ணிய செய்திகள் கேட்டல் இதனால் மனம் அமைதியடைதல்
அதிர்ஷ்ட திகதி: 12   
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X