2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இந்தவார பலன்கள் (22.08.2010 – 28.08.2010)

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (22.08.2010 – 28.08.2010)




அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
சொல், செயல்களில் தெளிவும் சஞ்சல மனம் பிறகு தெளிவு உடையவர்களான மேஷ ராசி அன்பர்களே!
இந்த வாரம் உங்களுக்கு புதிதாக தொடங்க இருக்கும் காரியத்தில் வெற்றி கிடைக்கும். அதனால் இன்பம் ஏற்படும். அரசாங்க ஊழியர்கள் மூலம் உதவி கிடைக்கும். பணம் உழைப்பதில் அதிகம் ஊக்கம் எடுக்கவேண்டும். வேண்டாத உணவால் உடல் உபாதைகள் ஏற்பட கூடும் அவதானம் தேவை. திருட்டு ஏற்படக் கூடும், அவதானத்துடன் இருக்கவும். குடும்பத்தில் பெண்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.
அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்:  ஒரேஞ் சிவப்பு  
வழிபாடு: சிவன் (சூரியன்)



கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் சாதனங்களை பெற்றுக் கொள்ளும் இடப ராசி அன்பர்களே!
இந்த வாரம் உங்களுக்கு புதிதாக தொடங்கும் காரியத்தில் தடை ஏற்படும். சில தோல்விகளை சந்திக்க நேரிடும். பிறர் உதவி நாட வேண்டிய நிலை ஏற்படும். செய்யும் எல்லா செயல்களிலும் மிக நிதானம் தேவை. உடல் உஷ்ணம், காய்ச்சல், தலைவலி ஏற்படலாம். வெளிபிரயாணத்தால் இலாபம். வேண்டாத பிரச்சினை செலவு ஏற்பட இடமுண்டு. மகான்களின் ஆசீர்வாதம் தரிசனம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்



மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9-பாதங்கள்.
தீவிரமோ தொய்வோ இல்லாத மிதமான போக்குடையவர்கள், மென்மையான குணம் படைத்த மிதுன ராசி அன்பர்களே!
இந்த வாரம் உங்களுக்கு சுற்றத்தினர் நண்பர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். இசைத்துறையில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் பெண்கள் மூலம் உதவி கிடைக்கும். மனச்சஞ்சலம், சிரமம், வேண்டாத பேச்சால் விவாதம் ஏற்பட இடமுண்டு. வார்த்தை பிரயோகிப்பதில் நிதானம் தேவை. அரச ஊழியர்கள் மூலம் வெற்றி கிடைக்கும். உடல் உபாதைகள் ஏற்படக் கூடும் அவதானம் தேவை. மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திகதி: 26
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
வழிபாடு: நவக்கிரகம்



புனர்பூசம், 4, பூசம் ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
பிடிவாதமான குணமும் சாதுர்யமும் தைரியமும் அனைவரிடமும் அன்பு கொண்ட கடகராசி அன்பர்களே!
இந்த வாரம் உங்களுக்கு அநாவசிய செலவு ஏற்படக்கூடும். உணவில் வெறுப்பு, அதனால் உடல் நலம் பாதிப்பு ஏற்படும். இசைத் துறையில் ஆர்வம் ஏற்படக்கூடும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. சில மனக்குழப்பம் அலைச்சல் ஏற்படக்கூடும். தொலைந்த பொருட்களை காணக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும். வேண்டாத பேச்சுக்களால் பிரச்சினை முயற்சியில் தோல்வி ஏற்படக் கூடும். செய்யும் செயல்களில் அவதானத்துடன் நடக்கவும்.
அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்

சந்திராஷ்டமம்
ஓகஸ்ட் 24ஆம் திகதி காலை 07.16 மணியிலிருந்து ஓகஸ்ட் 26 மாலை 07.58 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
வாக்கு சாதுர்யம், மனோபலம் உள்ளவர்கள், சற்று அகம் பாவம் உள்ளவர்கள், அதிகார தன்மை உடைய சிம்ம ராசி அன்பர்களே!
இந்த வாரம் உங்களுக்கு உற்சாகத்துடன் நல்ல காரியங்களை  தொடங்கலாம். நல்லவர்களுடய நட்பு கிடைத்தல், உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் இன்பம். உடல் உஷ்ணம், காய்ச்சல்- தலைவலி ஏற்படலாம். உயரதிகாரிகளுடன் பகை ஏற்படாத விதத்தில் நடக்கவும். பெரியோர்களை மகான்களை சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் சேரும். தூரதேசத்தில் இருந்து நல்ல செய்தி கேள்விப்படக் கூடும்.
அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுத் துணி  
வழிபாடு: குருபகவான்

சந்திராஷ்டமம்
ஓகஸ்ட் 26ஆம் திகதி மாலை 07.58 மணியிருந்து ஓகஸ்ட் 29ஆம் திகதி  காலை 08.00 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக  நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
நீதி தவறாமை, கண்ணியம், நேர்மை, கனிவான உள்ளம், சுபாவத்தில் கலகலப்பான கன்னி ராசி அன்பர்களே!
இந்த வாரம் உங்களுக்கு சில மன குழப்பம், துக்கம் ஏற்படக் கூடும். பெண்களுடன் விவாதம் ஏற்படக்கூடும். வார்த்தைகளை பிரயோகிப்பதில்  நிதானம் தேவை. விசித்திரமான ஆச்சரியமான பொருட்களை காண கிடைக்கும். முயற்சியில் தோல்வி ஏற்படும். அரச ஊழியர்களால் நன்மை ஏற்படும். பிறர் உதவி நாடவேண்டிய நிலை ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அவதானம் தேவை. தீய நட்பால் பிரச்சினை ஏற்படக் கூடும்.
அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு  
வழிபாடு: பார்வதி




சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1,2,3ஆம் பாதங்கள்.
எவரையும் எதையும் ஒருமுறை பார்த்ததுமே துல்லியமாக எடைபோடக்கூடியவர்கள், ஆடம்பரமான வாழ்க்கை உள்ள துலா ராசி அன்பர்களே!
இந்த வாரம் உங்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும், அதனால் பணவரவு கூடும். புதிய ஆடை- ஆபரணங்கள் சேரும். அறுசுவையான உணவு கிடைத்தல். குடும்பத்தில் பெண்கள் மூலம் உதவி கிடைக்கும் அதனால் இன்பம். புண்ணிய செய்தி கேள்விப்பட இடமுண்டு, அதனால் மன அமைதி பெறும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி. சிற்சில அலைச்சல் ஏற்படும். அதிகாரிகளுடன் பகை ஏற்படாத வகையில் நடக்கவும்.
அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு  
வழிபாடு: பார்வதி



விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடயவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே.!
இந்த வாரம் உங்களுக்கு குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சி ஏற்படும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது நிதானத்துடன் நடக்கவும். சாப்பாட்டில் வெறுப்பு ஏற்படலாம். சில மனக்குழப்பம், அலைச்சல் ஏற்பட கூடும். தொடங்கும் காரியத்தில் வெற்றி கிட்டும். சுற்றத்தினர், நண்பர்கள் அந்யோன்யம் அதிகரிக்கும் அதனால் இன்பம். நிம்மதியான உறக்கம் கிடைக்கும். அரச ஊழியர்கள் மூலம் உதவி கிடைக்கும். எதிர்பார்த்தபடி பணவரவு கூடும்.
அதிர்ஷ்ட திகதி: 23
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்



மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
வைராக்கியம், திடசிந்தனை, நேர்மை, நல்லொழுக்கம் உடைய தனுசு ராசி அன்பர்களே.!
இந்த வாரம் உங்களுக்கு தொடங்கிய காரியத்தில் எதிர்பார்த்தபடி வெற்றி கிட்டும். பணவரவு அதிகரிக்கும். நல்ல மனிதர்களின் நட்பு கிடைத்தல், பிறர் உதவி நாடவேண்டிய நிலை ஏற்படலாம். வீண் மனஸ்தாபத்துக்கு இடமுண்டு. உடலுக்கு ஒவ்வாத உணவை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. தவறான நட்பால் துன்பம் ஏற்படக்கூடும். செல்லும் பிரயாணத்தால் லாபம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்



உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
தெய்வீக பலன் பெற்றவர்களே... நினைத்ததை சாதிக்கும் வல்லமை படைத்த மகர ராசி அன்பர்களே!
இந்த வாரம் உங்களுக்கு வீண் சிரமம், மயக்கம், சிக்கல்கள் ஏற்பட்டு நீங்கும். அநாவசிய செலவு ஏற்படும். புதிதாக தொடங்க இருக்கும் காரியத்தில் தடை ஏற்படக் கூடும், நிதானத்துடன் நடக்கவும். கடினமான வாக்குவாதம் ஏற்படலாம். வார்த்தை பிரயோகிப்பதில் அவதானம் தேவை. அரசாங்க அதிகாரிகள் மூலம் உதவி கிடைக்கும். பணவரவு தடைப்படும். தொழில் ஸ்தானத்தில் உயரதிகாரிகளுடன் பகை ஏற்படாத விதத்தில் நடக்கவும். மகான்களின் தரிசனம் கிடைக்கக்கூடும்.
அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்



அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
ஆடம்பரம் இன்றி நடப்பவர்களே, புத்திரர்களால் அதிக அளவில் அதிர்ஷ்டம் செல்வாக்கு பெற்ற கும்ப ராசி அன்பர்களே!
இந்த வாரம் உங்களுக்கு வியாபாரத்தில் இருந்து வந்த தடை நீங்கும். நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு ஏற்படும். அறுசுவையான உணவு கிடைத்தல். அயலார்களுடன் பிரச்சினை ஏற்படக் கூடும். சிற்சில மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பிறர் உதவி நாடவேண்டிய நிலை ஏற்படலாம். தூரதேசத்தில் இருந்து நல்ல செய்தி கேள்விப்பட இடமுண்டு. நம்மை வழிநடத்தும் பெரியோர்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: சிவன் (சூரியன்)



பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.
காரியத்தில் மனத்தெளிவு உள்ளவர்கள், யாரிடமும் மனம் விட்டுப் பழக விருப்பமில்லாத மீன ராசி அன்பர்களே!
இந்த வாரம் உங்களுக்கு வியாபாரத்தில் பிரச்சினை, தடை ஏற்படும். திருட்டு ஏற்பட இடமுண்டு, அவதானத்துடன் இருக்கவும். உணவில் வெறுப்பு ஏற்படும் அதனால் உடல் ஆரோக்கியத்தில் கெடுதி ஏற்படக்கூடும். இசைத்துறையில் ஆர்வம் அதிகரித்தல். வெளிபிரயாணத்தால் லாபம். அநாவசிய செலவு ஏற்படக்கூடும். தொலைந்த பொருட்களை கண்டடயலாம். புண்ணிய செய்தி கேள்விப்படுதல் அதனால் மனஅமைதி ஏற்படக்கூடும். மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்  
வழிபாடு: பிரம்மா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .