2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இந்தவார பலன்கள் (27.02.2011 - 05.03.2011)

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 26 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (27.02.2011 - 05.03.2011)


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

சொல் செயல்களில் தெளிவும், சஞ்சல மனம் பிறகு தெளிவு உடையவர்களான மேட ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சில சம்பவங்கள் நடைபெறும், மேலும் சொந்தபந்தங்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கக்கூடும். தொழில் தொடர்பான புதிய முயற்சிகளை தற்போது தவிர்த்துக்கொள்ளவும். உற்சாகத்துடன் அன்றாட வேலைகளை மேற்கொள்வீர்கள். புதிய செய்திகள் திடீர் பயணத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு. பொழுதுபோக்குகளின்போது பிறரின் உதவிகள் கிடைக்ககூடும். இசையில் அதிக நேரத்தை செலவிடுதல், இதனால் மனஅமைதி கிடைக்கும். இக்காலகட்டங்களில் பிறரின் பேச்சுக்களை கேட்டு தேவையற்ற முயற்சிகளில் ஈடுபடாது சுயசிந்தனையுடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட திகதி: 03
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்




கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் சாதனங்களை பெற்றுக்கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு புதிய காரியங்களில் ஈடுபடும்போது கடின உழைப்பு தேவை, பெண்களுடன் கோபத்தில் பேசும் வார்த்தைகள் மனசங்கடத்தை ஏற்படுத்தும், வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். வெண்மையான ஆடைகளை அணியலாம். நீண்ட நாள் தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. தொழில் ஸ்தானத்தில் பணப்பிரச்சினைகள் ஏற்படும், இதனால் அலைச்சல்களை மேற்கொள்ளவேண்டிருக்கும். சுவையான உணவு உண்ணலாம். எதிர்பாராத புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும். இக்காலகட்டங்களில் நீங்கள் செய்யும் செயல்களை அக்கறையுடன் செய்தால் மேன்மை அடையலாம்.

அதிர்ஷ்ட திகதி : 05
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்


சந்திராஷ்டமம்
பெப்ரவரி 26ஆம் திகதி மாலை 01.35 மணியிலிருந்து பெப்ரவரி 28ஆம் திகதி மாலை 10.47 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தீவிரமோ, தோய்வோ இல்லாத மிதமான போக்குடையவர்கள், மென்மையான குணம் படைத்த மிதுன ராசி அன்பர்களே..!

                   
இந்தவாரம் உங்களுக்கு அரசாங்க ஊழியர்களின் உதவியுடன் புதிய திட்டங்களை முன்னெடுக்கலாம். அனாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். குடும்பத்தாருடன் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவதால் நன்மைகள் வந்து சேரும். பெண்களின் உதவிகள் மகிழ்ச்சி தரும். பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, கவனம் தேவை. நல்ல காரியங்களில் அதிக நாட்டம் காட்டுவீர்கள். நிம்மதியான உறக்கம் தேகத்துக்கு புத்துணர்ச்சி தரும். தீய நண்பர்களுடன் அதிக பேச்சுக்கள் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இக்காலகட்டங்களில் நம்மை காக்கும் இறைவனை இடைவிடாது பிரார்த்தனை செய்வதால் கவலைகள் அகலும்.

அதிர்ஷ்ட திகதி : 02
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சந்திரன்)


சந்திராஷ்டமம்
பெப்ரவரி 28ஆம் திகதி மாலை 10.47 மணியிலிருந்து பெப்ரவரி 03ஆம் திகதி மாலை 10.02 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

பிடிவாதமான குணமும் சாதுர்யமும் தைரியமும் அனைவரிடமும் அன்பும் கொண்ட கடகராசி  அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு நண்பர்களின் உதவியுடன் புதிய திட்டங்களை நடைமுறைபடுத்தலாம். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் இன்பகரமான செய்திகள் வந்து சேரும். இனிதான உணவு நிறைவாக கிடைக்கும். தொழில் விரித்திக்காக நவீன நுட்பங்களை கையாண்டு அதிக லாபம் அடையலாம். சேமிப்பைவிட செலவுகள் சற்று அதிகரிக்கும். புதுமையான பொருள் காணக்கிடைத்தல். வீடு அல்லது காணி சம்பந்தமான இடமாற்றங்களுக்கு வழியுண்டு. பெண்களுக்கு அழகிய ஆடை, அணிகலன்கள் பரிசாக கிடைக்கக்கூடும். இக்காலகட்டங்களில் எக்காரணம் கொண்டும் பிறருக்கு சங்கடம் தராது செயல்படுவது நன்று.

அதிர்ஷ்ட திகதி : 01
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)


சந்திராஷ்டமம்
பெப்ரவரி 03ஆம் திகதி காலை 10.02 மணியிலிருந்து பெப்ரவரி 05ஆம் திகதி மாலை 10.22 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

வாக்கு சாதுர்யம், மனோபலம் உள்ளவர்கள். சற்று அகம் பாவம் உள்ளவர்கள், அதிகார தன்மை உடைய சிம்ம ராசி அன்பர்களே..!

                                
இந்தவாரம் உங்களுக்கு வியாபாரம் தொடர்பான முயற்ச்சிகள் நஷ்டத்தை ஏற்படுத்த கூடும். சிந்தித்து செயல்படவும். உல்லாச பிரயாணங்கள் செல்வதனால் மனதில் சோர்வுகள் நீங்கி உற்சாகம் கிடைக்கும். அரச வேலை வாய்ப்புக்களுக்கு வழியுண்டு. தேவையற்ற பிரச்சினைகள் தேடிவந்தாலும் அதிலிருந்து விலகி நிற்பது நல்லது. ஒவ்வாத உணவினால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்கவும். நமது எதிர்கால வழிகாட்டிகளான பெரியார்களை கண்டு ஆசிர்வாதம் பெறவாய்ப்பு கிட்டும். இக்காலகட்டங்களில் நன்மையானதை மட்டும் நினைப்பதால் அனைத்து துன்பங்களும் எளிதாகிவிடும்.

அதிர்ஷ்ட திகதி : 04
அதிர்ஷ்ட நிறம் : கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
அதிர்ஷ்ட தெய்வம் : பிரம்மா


 

உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

நீதி தவறாமை, கண்ணியம், நேர்மை, கனிவான உள்ளம், சுபாவத்தில் கலகலப்பான கன்னி ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு நினைத்த காரியத்தை செய்துமுடிக்க அதிக அலைச்சல்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் தேடிவருதல், இதனால் அதிக பணவரவு ஏற்படும். குடும்பத்தில் சகோதர சகோதரிகள் விட்டுகொடுத்து செயல்படுவதால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும். உடலால் சில சிரமங்கள் வந்து நீங்கும். ஆரோக்கியமான உணவுகளை உண்ணவும், பிறரின் பிரச்சினைகளை முன்னிட்டு பேசுவதால் அது நமக்கே பகை ஏற்படுத்தும். இக்காலகட்டங்களில் பெரியார்கள் அறிவுரைகளை கேட்டு நடப்பதால் வாழ்வில் நல்வழிகளை பெற்றிடலாம்.

அதிர்ஷ்ட திகதி : 26
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம் : நவகிரகம்




சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

எவரையும் எதையும் ஒருமுறை பார்த்ததுமே துல்லியமாக எடைபோடக்கூடியவர்கள், ஆடம்பரமான வாழ்க்கை உள்ள துலா ராசி அன்பர்களே..!

                                  
இந்தவாரம் உங்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கு அரசாங்க உதவிகள் கிடைக்க கூடும். பொருள் சேர்க்கை ஏற்படும். ஆன்மீக பயணங்களின்போது மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும். சாப்பாட்டில் விருப்பமின்மை ஏற்படுதல். மேல் அதிகாரிகளை அனுசரித்து செயல்படவும். நீண்டநாள் எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை மகிழ்ச்சி தரும். பகைவர்களினால் சிலவிதமான சிக்கல்கள் ஏற்பட்டு நீங்கும். அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். பணம் சேமிப்பதில் கடின உழைப்பு தேவை. இக்காலகட்டங்களில் வாழ்க்கையில் எவ்வாறு முன்னேற்றம் அடையலாம் என்பதை மட்டும் மனதில் கொண்டு செயல்படவும்.

அதிர்ஷ்ட திகதி : 26  
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம் : நவகிரகம்




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடையவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!

                                  
இந்தவாரம் உங்களுக்கு முயற்சி செய்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரத்தில் அதிகாரிகளுடனும் சக ஊழியர்களுடனும் பகை ஏற்பட வாய்ப்புண்டு. நிதானமாக செயல்படவும். விநோதங்களில் ஈடுபடும்போது மிக கவனம் தேவை. குடும்பத்தில் சொந்தபந்தங்களின் அன்யோன்யம் பலப்படும். சரும நோய்கள் வந்து நீங்கும். புதிய ஆடை, அணிகலன்கள் பரிசாக கிடைக்க கூடும். தூரபிரயணங்கள் செல்வதனால் அனுகூலம். திறமையான சாதனைகளை நடைமுறைபடுத்தி மேன்மை அடையலாம். இக்காலகட்டங்களில் தெய்வீக வழிபாடுகளில் அதிக அக்கறை செலுத்தவும்.

அதிர்ஷ்ட திகதி : 27
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி


 

மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

வைராக்கியம், திடசிந்தனை, நேர்மை, நல்லொழுக்கம் உடைய தனுசு ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு அன்றாட வேலைகளை உற்சாகத்துடன் தொடங்கலாம். இசையில் அதிக நேரத்தை செலவிடுதல், நல்ல நண்பர்களின் ஒற்றுமை மகிழ்ச்சி தரும். தொழில் தொடர்பான முயற்சிகள் காலதாமதத்தை ஏற்படுத்தும். வாகன சாரதிகளுக்கு தூரபிரயாணங்களின் மூலம் அதிக லாபத்தை பெற்றுகொள்ளலாம். பெண்களுடன் அனுசரித்து நடப்பது நன்மைக்கே. எச்சந்தர்ப்பத்திலும் பிறரின் தவறுகளை சுட்டிக்காட்டுவதையும் முன்னிற்பதையும் தவிர்க்கவும். தூய்மையான ஆடைகளை அணியலாம். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். இக்காலகட்டங்களில் எந்த காரியங்களில் ஈடுபடும்போது சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திகதி : 01
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (பார்வதி)




உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தெய்வீக பலன் பெற்றவர்களே நினைத்ததை சாதிக்கும் வல்லமை படைத்த மகர ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். விசேடமாக பெண்கள் தமது பொறுப்புக்களை அக்கறையுடன் செய்வார்கள். நண்பர்களின் உதவியுடன் புதிய திட்டங்களை மேம்படுத்துவீர்கள். தூய்மையான ஆடைகளை அணியலாம். வியாபாரத்தில் நவீன வாய்ப்புக்கள் தேடிவர கூடும். பணப்பிரச்சினைகள் சற்று அலைச்சலை ஏற்படுத்தினாலும் கடின உழைப்பினால் செயல்படுவதன் மூலம் அதிக லாபத்தை பெற்றுக்கொள்ளலாம். ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல். அனாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். இக்காலகட்டங்களில் வாழ்வில் பல தோல்விகள் கண்டு மனம் தளராது மீண்டும் வெற்றியை நோக்கி பயணிக்கவும்.

அதிர்ஷ்ட திகதி : 01
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)




அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

ஆடம்பரம் இன்றி நடப்பவர்களே, புத்திரர்களால் அதிக அளவில் அதிர்ஷ்டம் செல்வாக்குபெற்ற கும்ப ராசி அன்பர்களே...!


இந்தவாரம் உங்களுக்கு இனிமையான உறக்கம் கிடைக்கும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது மிக கவனம் தேவை, அனாவசிய செலவுகைளை தவிர்க்கவும். மேல் அதிகாரிகளுடன் நிதானமாக செயல்படவும். மாணவர்கள் கல்வியில் தமது திறமையான சாதனைகளினால் வெற்றி பெறலாம். பொருள் சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சில இடமாற்றங்களுக்கு வழியுண்டு. அரச தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கக்கூடும். அயல்தேசங்களிருந்து வரும் செய்திகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். இக்காலகட்டங்களில் பெண்களுடன் அதிக பேச்சுவார்த்தைகளிருந்து விலகி நிற்பது நல்லது.

அதிர்ஷ்ட திகதி : 03
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம் : குருபகவான்



 

பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

காரியத்தில் மனத்தெளிவு உள்ளவர்கள், யாரிடமும் மனம் விட்டுப்பழக விருப்பமில்லாத மீன ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு வெளிதேச பயணங்களின்போது புதிய நண்பர்களின் அறிமுகம் மகிழ்ச்சி தரும். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. கடினமான வேலைகளை எளிதாக செய்து முடிக்கக்கூடியதாயிருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும், இதனால் உறவினர்களின் வருகை குதூகலத்தை ஏற்படுத்தும். நீண்டநாள் பிரார்த்தனையின் பலனாக மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும். பகைவர்களுடன் கடின வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். இக்காலகட்டங்களில் ஆலய அனுஷ்டானங்களில் அதிக நாட்டம் காட்டுவதால் மனஅமைதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி : 05
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X