2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்தவார பலன்கள் (27.03.2011 - 02.04.2011)

A.P.Mathan   / 2011 மார்ச் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (27.03.2011 - 02.04.2011)


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

கலையான தோற்றமும் கவலைக்கு முதலிடம் கொடுக்காது பகிர்ந்து வாழும் எண்ணம் கொண்ட மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்புக்கள் தேடிவரகூடும். மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து நடக்கவும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று உற்சாகத்துடன் நல்ல காரியங்களில் ஈடுபடலாம். குடும்பத்தில் பெரியார்களின் பேச்சுக்கு மதிப்பளித்து செயல்படவும். வீடு அல்லது தொழில் மாற்றத்திற்கு வழியுண்டு. எதிர்பார்த்த பணவரவுகள் கிடைக்கும். வேண்டாத செலவுகளை தவிர்க்கவும். புதிய திட்டங்களை நடைமுறைபடுத்த கூடியதாயிருக்கும். சுற்றுலா பயணங்களின்போது பிறரின் உதவிகள் கிடைக்கும். சில பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. மனதளவில் அலைச்சல்கள் ஏற்படக்கூடும். இக்காலகட்டங்களில் உடலுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்த்து ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்கவும்.

அதிர்ஷ்ட திகதி: 02
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி



கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தனக்கு பிடிக்காததை யாருக்காகவும் செய்யாத குழந்தையான உள்ளம் பெற்ற இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு வியாபாரம் தொடர்பான முயற்சிகள் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும், இதனால் பணத் தட்டுப்பாடுகள் ஏற்படும். வரவுக்கேற்ற செலவுகளை மேற்கொள்ளவும். அயல் தேசங்களிருந்து வரும் செய்திகள் மகிழ்ச்சியை தரும். உடல் உஷ்ணம் அதிகரிப்பதுடன் உண்ணும் உணவில் விருப்பமின்மை தோன்றும். தீய நண்பர்களின் சகவாசங்கள் பகை ஏற்படுத்தும். புதுமையான பொருள் காணக்கிடைத்தல், குடும்ப உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆலய அனுஷ்டானங்களின்போது தூய்மையான ஆடைகளை அணியலாம். கடின வாக்குவாதங்களுக்கு இடமுண்டு. வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். இக்காலகட்டங்களில் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு கையாளவும்.

அதிர்ஷ்ட திகதி: 01
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)




மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எல்ல உயிர்களையும் நேசித்து வாழும் மலர் போன்ற மென்மையான குணம் படைத்த மிதுன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு பெண்களின் மூலம் உதவிகள் கிடைக்கும், அறுசுவையான உணவுகளை உண்ணலாம். வியாபார உத்தியோகத்தர்களுக்கு மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கக்கூடும். பொழுதுபோக்குகளுக்காக தூரபிரயாணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகை சிறப்பாக காணப்படும். பிறரின் நன்மை கருதி தேவையற்ற பிரச்சினைகளில் முன்னிற்பதை தவிர்க்கவும். நீண்டநாள் விலகி சென்ற நட்புக்கள் ஒன்றிணைய கூடும். தொலைத்த பொருளை மீண்டும் பெற்றுகொள்ளலாம். தொடங்கும் புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும். இக்காலகட்டங்களில் நற்சிந்தனையுடன் இறைவனை வழிபடுவதால் வாழ்க்கையில் சோர்வுகளும் சஞ்சலங்களும் நீங்கும்.   

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா


சந்திராஷ்டமம்
மார்ச் 27ஆம் திகதி காலை 04.35 மணியிலிருந்து மார்ச் 30ஆம் திகதி மாலை 03.50 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

தன் கையே தனக்கு பலம் என்ற கருத்துக்கு ஒரு விதிவிலக்காக விளங்கும் தன்னம்பிக்கை அதிகம் உள்ள கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நண்பர்களின் மூலம் இன்பகரமான செய்திகளை கேள்விப்படலாம். பெண்களுக்கு அழகிய ஆடை, அணிகலன்கள் பரிசாக கிடைக்கும். இசையில் அதிக நாட்டம் காட்டுதல். குடும்பத்தாருடன் பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடலாம். வியாபாரத்தில் நவீன திட்டங்களினால் முன்னேற்றம் ஏற்படும். பகைவர்களுடன் அனாவசிய கருத்து வேற்றுமைகள் ஏற்படக்கூடும். புதிய காரியங்கள் சற்று அலைச்சலை ஏற்படுத்த கூடும். சில இடமாற்றங்கள் லாபகரமாக அமையும். சரும நோய்கள் வந்து நீங்கும், தேகசுகத்தை பாதுகாக்கவும். இக்காலகட்டங்களில் வாழ்வில் ஏற்படும் தடுமாற்றங்கள் கண்டு தளர்ந்து போகாது நம்பிக்கையுடன் செயல்படுவது அவசியம்.

அதிர்ஷ்ட திகதி: 02
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி


சந்திராஷ்டமம்
மார்ச் 30ஆம் திகதி மாலை 03.50 மணியிலிருந்து ஏப்ரல் 01ஆம் திகதி காலை 04.23 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



மகம், பூரம்;, உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

பிறரிடம் மனம் விட்டு பேசிப்பழகும் குணமும் அதிகார தன்மையும் யாரிடமும் தாழ்ந்து செல்லாத துணிவும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நீங்கள் முயற்சிசெய்த வேலைகளில் வெற்றி காண்பீர்கள். இன்பமான உறக்கம் கிடைக்கும். எதிர்பார்த்த தனலாபம் கிட்டும். அரசாங்க ஊழியர்களின் மூலம் உதவி, சேவை கிடைக்கக்கூடும். முக்கியமான தகவல்கள் வந்து சேரும். உயர் அதிகாரிகளின் மறைமுக போட்டிகளினால் வியாபாரத்தில் சிறு மந்தநிலை ஏற்படும். மாணவர்கள் தமது ஆற்றலினால் புதிய சாதனைகளை செயல்படுத்துவார்கள். குடும்பத்தில் சுபவிசேஷங்கள் நடைபெறுவதுடன் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பெரியார்களின் அன்பும் ஆதரவும் நல்வழிநடத்தலை ஏற்படுத்தும். இக்காலகட்டங்களில் மனதுக்கு திருப்தி தரும் சில சம்பவங்கள் நடைபெற வாய்ப்புண்டு.

அதிர்ஷ்ட திகதி: 31
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்


சந்திராஷ்டமம்
ஏப்ரல் 01ஆம் திகதி காலை 04.23 மணியிலிருந்து ஏப்ரல் 04ஆம் திகதி மாலை 04.58 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எந்த விடயத்தையும் அமைதியுடனும் பொறுப்புடனும் செய்து முடிக்கும், காரணமின்றி பேசாத கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நீங்கள் அன்றாட பணிகளை உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பெண்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். நல்ல நண்பர்களின் நட்பு வலிமை பெறும். பணதட்டுபாடுகள் ஏற்படும், பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் தேவை. விசித்திரமான பொருள் காணக்கிடைத்தல். பிறரின் உதவிகள் கிடைக்கக்கூடும். அனாவசிய ஆடம்பர செலவுகளை மேற்கொள்ளல். சில மனகஷ்டங்கள் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். குலதெய்வ வழிபாடுகளில் அதிக அக்கறை செலுத்துவதால் நன்மைகள் ஏற்படும். அரசாங்க வேலைவாய்ப்புக்கள் கிடைக்கக்கூடும். உற்றார் உறவினர்கள் மூலம் செய்திகள் கிடைக்கும். இக்காலகட்டங்களில் மனதுக்கு அமைதி தரும் தியானங்களில் ஈடுபடுவதால் உற்சாகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்




சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

தேடி சென்றும் உதவிடும் குணமும் முடிவுகளை பாராது முன்னேற்றத்திற்காக முழு மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நீண்டநாள் தெலைந்த பொருள் மீண்டும் கிடைக்ககூடும். நண்பர்களுடன் விநோத விளையாட்டுகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். பெண்களுடன் அனாவசிய பேச்சுவார்த்தைகள் பிரச்சினை ஏற்படுத்தக்கூடும், நிதானம் தேவை. வியாபாரத்தில் அதிகாரிகளுடனும் சக ஊழியர்களுடனும் ஒத்துழைப்புடன் செயல்படவும். ஒவ்வாத உணவினால் உடல் உபாதைகளை எதிர்நோக்கநேரிடும். நிம்மதியான தூக்கம் நிறைவாக கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகளை பெற்றுகொள்ள அலைச்சல்களை மேற்கொள்ளல். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். குடும்பத்தில் சகோதர சகோதரிகள் விட்டுக்கொடுத்து செயல்படுவார்கள். இக்காலகட்டங்களில் பிறருடன் பேசும்போது சொல் கட்டுப்பாடு தேவை.

அதிர்ஷ்ட திகதி: 31
அதிர்ஷ்ட நிறம்: சாம்பள், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடயவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நல்ல நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். தொழிலில் பல நவீன நுட்பங்களை பயன்படுத்தி ஆதாயம் அடைவீர்கள். உல்லாச பிரயாணங்கள் செல்லும்போது மிக கவனம் தேவை. திருடர்களின் நடமாட்டம் மனபயத்தை ஏற்படுத்தும். உழைப்புக்கேற்ற ஊதியம் உடனுக்குடன் கிடைக்கும். நாவுக்கு சுவையான ஆகாரம் கிடைக்கும். நன்மையான காரியங்களில் அதிக அக்கறை செலுத்தவும். சேமிப்பைவிட செலவுகள் அதிகரித்தல். வீடு அல்லது காணி சம்பந்தமான இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். புதிய சாதனைகளினால் மேன்மை அடையலாம். இசையில் ஈர்ப்பு அதிகரிக்கும். இக்காலகட்டங்களில் குடும்ப உறவினர்கள் மூலம் இன்பகரமான செய்திகள் வந்து சேரும்.   

அதிர்ஷ்ட திகதி: 30
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு சில சஞ்சலங்கள் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். துஷ்ட நண்பர்களினால் இடையூறுகள் ஏற்படக்கூடும். புதிய தொழில் தொடங்குவதோ தேவையற்ற பிரச்சினைகளை வாதிடுவதையும் தவிர்க்கவும். அரச அதிகாரிகளின் சலுகைகள் கிடைக்ககூடும். பணவரவுகள் தாமதத்தை ஏற்படுத்தும். கடின உழைப்பினால் மட்டுமே உயர்வு. தொலைதூர பயணங்கள் அதிக அலைச்சலை ஏற்படுத்தும். செயல்களில் சிறு தடுமாற்றங்கள் ஏற்படக்கூடும், பொறுமையுடன் நடக்கவும். நீண்டநாள் பிரார்த்தனையின் பலனாக மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும். இக்காலகட்டங்களில் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுவதால் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதி: 01
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)




உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் சுபவிசேஷங்கள் மகிழ்ச்சி தரும். வெண்மையான ஆடைகளை அணியலாம். புதிய முயற்சிகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல். பெண்களுடன் அனாவசிய பேச்சுவார்த்தைகளை தவிர்த்துகொள்ளவும். நெருங்கிய நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும். மனதில் சோர்வுகள் நீங்கி உற்சாகம் கிடைக்கும். தெய்வீக வழிபாடுகள் அதிக அக்கறை செலுத்தவும். அரசாங்க தொழில் வாய்ப்புக்கள் தேடி வருதல், எதிர்பாராத நல்ல செய்திகள் கிடைக்கும். உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படக்கூடும், ஆரோக்கியமான உணவுகளை உண்ணவும். இக்காலகட்டங்களில் வாழ்கையில் ஏற்பட்ட கவலைகள் நீங்கி அமைதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 01
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)




அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரமின்றி வாழ விரும்பும் வாக்குவன்மை கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு வியாபாரத்தில் மந்தநிலை மாறி புதிய வாய்ப்புக்கள் தேடிவரகூடும். குடும்பத்தாருடன் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும். நெருங்கிய நண்பர்களின் ஒற்றுமை வலிமை பெரும். சிலர் தமது ஆற்றலால் புதிய சாதனைகளை மேம்படுத்துவார்கள். பெண்களுடன் அனுசரித்து நடப்பதால் நன்மதிப்பை பெறுவீர்கள். நல்ல செய்திகள் வந்து சேரும். புதுமையான பொருள் காணக்கிடைத்தல். அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கக்கூடும். மனதால் சிறு சஞ்சலங்கள் தோன்றும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். வார இறுதியில் வாழ்வில் ஏற்பட்ட தடைகள் நீங்கி நன்மைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்


 

பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

வாழ்க்கையில் பல கஷ்டங்களை உறுதியாக நீந்தி கடந்து செல்லும் உப்பை போன்று உறையாத உள்ளம் பெற்ற மீன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நீங்கள் தொடங்கிய காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான சில இடமாற்றங்கள் ஏற்படகூடும். பகைவர்களின் மறைமுக இடையூறுகள் கவலையை தரும், நிதானம் தேவை. அஜீரண சம்பந்தமான கோளாறுகளினால் சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும். ஆலய அனுஷ்டானங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் பயம் உணர்வுகள் வந்து நீங்கும். பொழுதுபோக்குகளில் அதிக ஆர்வம் காட்டுதல். பணவரவுகள் உரிய நேரத்தில் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியங்களின்போது உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வார இறுதியில் தேவையற்ற பிரச்சினைகளில் முன்னிற்பதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .