2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தென் ஆபிரிக்கா - அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

A.P.Mathan   / 2012 நவம்பர் 10 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டித் தொடர் என்றால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அந்தளவுக்கு விறு விறுப்பாக இருக்கும். முதல் தர அணிகளாக இவை கருதப்படுவதனால் இந்த நிலைமை இருக்குறது. குறிப்பாக வேகப் பந்துகள் அனல் பறக்கும் வேகத்தில் மோதிக் கொள்ளும். இது கூட இன்னும் சுவாரசியமான விடயமே.
இம்முறை இன்னும் கொஞ்சம் சுவாரசியம் அதிகமாகவே உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் தென் ஆபிரிக்க அணி முதல் இடம் என்ற நிலையில் இந்த தொடரில் விளையாடுகிறது. அவுஸ்திரேலிய அணி மூன்றாமிடத்தில் உள்ளது. பலம் என்று பார்க்கும் போது தென் ஆபிரிக்க அணி பலமாக தென்படுகிறது. அவுஸ்திரேலிய அணி அண்மைக்காலத்தில் தடுமாறி வருகின்றது. அல்லது எதிர்பார்த்த அளவு பிரகாசிக்கவில்லை என்பதே தென் ஆபிரிக்க அணி வெற்றி பெறும் வாய்ப்புக்கள் அதிகம் என சொல்லக் காரணமாகவுள்ளது.

அவுஸ்திரேலிய அணி ஷேன் வோட்சனை நம்பியே அதிகமாக களமிறங்கி வருகிறது. ஆனால் அவர் உபாதை அடைந்து இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளமை அவுஸ்திரேலிய அணிக்கு பின்னடைவைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. துடுபாட்டத்தில் அணித்தலைவர் மைக்கல் கிளார்க், ரிக்கி பொன்டிங், மைக்கல் ஹஸ்ஸி ஆகியோர் பலமானவர்கள். டெஸ்ட் போட்டிகளில் டேவிட் வோர்னரை முழுமையாக இன்னும் நம்ப முடியாத நிலை உள்ளது. பந்து வீச்சு பலமாக இருக்கின்ற போதும் தென் ஆபிரிக்க அணியின் பலமான துடுப்பாட்ட வரிசையை தகர்க்கக் கூடிய அளவு இருக்குமா என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவுஸ்திரேலிய அணி சொந்த நாட்டில் வைத்து அவ்வளவு இலகுவாக விட்டுக்க கொடுக்காது. அதிக எதிர் பார்ப்புக்கள் இல்லாமல் இருப்பது அவர்களுக்கான வெற்றி வாய்ப்புக்களை அழுத்தங்கள் இன்றி தரக்கூடும்.

தென் ஆபிரிக்கா அணி விபரம்
கிரேம் ஸ்மித், ஹசிம் அம்லா, Ab De வில்லியர்ஸ், ஜக்ஸ் கலிஸ், JP டுமினி, அல்விரோ பீற்றர்சன், பஅப் டு பிலேசிஸ், றோரி லீன்வெல்த், மோர்னி மோர்க்கல், வேர்ணன் பிளண்டர், ரொபின் பீற்றர்சன், டேல் ஸ்டைன், ஜக்ஸ் ருடோல்ப், தமி சோளக்கிளி.

அவுஸ்திரேலியா அணி விபரம்
மைக்கல் கிளார்க், ரிக் பொன்டிங், மைக்கல் ஹஸ்ஸி, டேவிட் வோர்னர், எட் கொவன், பென் ஹில்பான்ஹோஸ், நேதன் லியோன், ஜேம்ஸ் பட்டின்சன், பீற்றர் சிடில், ரொப் குயினி, மிட்சேல் ஸ்டார்க், மத்தியூ வேட்.


அணிகளைப் பார்கின்ற வேளையில் தென் ஆபிரிக்க அணி பலமான துடுப்பாட்ட, பந்து வீச்சு வரிசையினைக் கொண்டுள்ளது. அதன்படி பார்த்தால் தென் ஆபிரிக்க அணியானது அவுஸ்திரேலிய அணியை விட சமநிலையில் பல மடங்கு முன்னால் உள்ளது. அவுஸ்திரேலிய அணி சமநிலை இல்லாத டெஸ்ட் அணியாகவே தென்படுகிறது. இதுதான் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என உறுதியாக சொல்லமுடியாமல் இருக்கக் காரணம்.

இந்த தொடர் இந்த இரு அணிகளுக்குமான முதலாமிட மோதலும் கூட. தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றால் அவர்களின் முதலிடம் அவர்களிடமே இருக்கும். மாறாக அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் தென் ஆபிரிக்க அணி முதல் இடத்தை இழக்கும் நிலை உருவாகும்.

தற்போதைய டெஸ்ட் தரப்படுத்தல்
தென் ஆப்ரிக்கா                   25    120
இங்கிலாந்து                         36    117   
அவுஸ்திரேலியா               34    116
பாகிஸ்தான்                          29    109
இந்தியா                                  32    106
இலங்கை                               29      98
மேற்கிந்திய தீவுகள்          28      90
நியூசிலாந்து                          24      76
பங்களாதேஷ்                       12      00

தொடரை வெல்லும் அணி முதல் இடைதைப் பெற்றுக்கொள்ளும் என்பது உறுதி. ஒரு போட்டி வித்தியாசத்தில் வென்றாலே ஏதோ ஓர் அணி முதல் இடத்தை தனதாக்கும். இதில் இந்தியா - இங்கிலாந்து தொடர் சேர்க்கப்படவில்லை. இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் வெற்றிபெற்று இந்தியா வெற்றி பெறாவிட்டால் மாத்திரமே இந்த இரு அணிகளுக்கும் முதல் இடம் இல்லாமல் போகும். எனவே முதல் இடத்திற்கான ஒரு போட்டியாக இந்த தென்ஆபிரிக்கா, அவுஸ்திரேலிய அணிகளுக்கான இந்த தொடர் அமையும் என எதிர்பார்க்க முடியும். டெஸ்ட் போட்டி ரசிகர்கள் நீண்ட நாட்கள் போட்டிகள் இல்லாமல் அலுத்துப் போய் இருந்தனர். அவர்களுக்கு சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது என நம்புவோம்.

இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளின் பெறுதிகள்...

இரண்டு அணிகளுக்குமான டெஸ்ட் தொடர் ஆரம்பித்து 101 ஆண்டுகள் ஆகிவிட்டான. நூற்றாண்டு தாண்டிய பின்னர் நடக்கும் முதல் தொடர் இது. 63ஆம் ஆண்டில் இருந்து 93ஆம் ஆண்டு நிற வெறி பிரச்சினை காரணமாக இரு அணிகளும் அவுஸ்திரேலியாவில் சந்திக்கவில்லை. இதுவரையில் ஒன்பது தொடர்கள் இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்றுள்ளன. அவுஸ்திரேலிய அணி  இதில் ஐந்து தொடர்களில் வெற்றி பெற்றுள்ளது. சமநிலையில் மூன்று தொடர்கள் நிறைவடைந்துள்ளன. இறுதியாக 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கிமிடையில் 36 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் அவுஸ்திரேலிய அணி 20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகளில் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. 8 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.

கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவர்கள்
ரிக்கி பொன்டிங்                   12    22    1163    143*     58.15       5    6   
ஜக்ஸ் கலிஸ்                       11    22    916     111       48.21        2    6   
மத்தியூ ஹெய்டன்            09    18    862     138       53.87        4    2
நீல் ஹார்வி                          05    09    834     205       92.66        4    3
டொன் பிரட்மன்                  05    05     806    299*    201.50       4    0
ஒப்ரி போக்னர்                     05    10    732     204       73.20         2    5
கரி கேர்ஸ்டன்                    09    17    698     153       43.62         2    3
விக்டர் டம்பர்                      05     09    661    214*     94.42         2    2   
எடி பார்லோவ்                     05    10    603     201       75.37         3    1
வர்ரன் பாட்ஸ்லீ                05    09    573     132       63.66         1    5
மார்க் ரெய்லர்                     06    10    569     170       63.22         2    2
ஸ்டீவ் வோ                         07    11    554     164       49.45         1    3
பிரைன் பூத்                          04     07    531    169       88.50         2    3
மார்க் வோ                           09     14    524    115*      40.30         2    3
ஹெர்ஷல் கிப்ஸ்             08     16    509      94       31.81          0    4

கூடுதலான விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள்
ஷேன் வோர்ன்                   12    23    1659    69    56/7       24.04        5
பில் விர்ரி                              05    10    632    37    17/6        17.08        2
கிளாரி க்ரிம்மெட்               05    08    557    33    83/7        16.87        3
ஷோன் பொல்லாக்           09    17    1098    32    87/7       34.31      1
பேர்ட் அயன்மொன்கர்     04    08    296    31    18/6        9.54          3
ஹியு ரேய்பீல்ட்                  05    09    843    30    81/7        28.10        2
அலன் டொனால்ட்            07    12    825    29    59/7        28.44        1
கிலென் மக்ராத்                   09    18    873    28    59/6        28.44        1
ரெஜி சுவாரஸ்                     05    09    651    25    47/6        26.04        2
பீட்டர் பொல்லாக்              05    09    710    25    95/6        28.40        2
ஜோ பார்ட்ரிச்                      05    10    833    25    91/7        33.32        2
சன்டி பெல்                            05    06    624    23    69/5        27.13        3
பிரட் லீ                                   08    16    984    23    93/5        42.78        1
டிப்பி கோட்டேர்                 05    10    633    22    69/6        28.77        1
ரிச்சி பெனோ                       08    15    755    22    68/5        34.31        1
பில் ஜொன்ஸ்டன்            05    10    737    21    152/6        35.09       2

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடர் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி ஆரம்பித்து டிசெம்பர் மாதம் நான்காம் திகதி தொடர் நிறைவடைகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X