2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘அறியாமை விசித்திரமானது’

Editorial   / 2017 ஜூலை 14 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த அறியாமையே ரொம்பவும் விசித்திரமானது. அறியாமையுடனேயே சீவிக்கிறவர்களில் ஒரு சாரார், யார் கூறுவதையும் நம்பிவிடுவார்கள். இன்னும் ஒரு சாராரோ யார் எந்த நல்லதைச் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். 

எந்த ஒருவிதப் புரிந்துகொள்ளும் ஆற்றலும் இன்றி, அல்லாடியபடி ஒரு நல்ல முடிவு எடுக்க முடியாமல் கஸ்டப்பட்டுக் காலத்தை விரயமாக்குவார்கள்.  

கல்வியையும் தேடாமல், நல்ல அனுபவ சாலிகளையும் நம்பாமல் மூளையை உபயோகிக்காமல் சந்தேக வாழ்வு வாழ்வது கடினம்தான்.  

ஆயினும், படிக்காத பாமரர்கள் தங்கள் கலாசாரம் பற்றிய நம்பிக்கையையும் தெய்வ வழிபாடு மூலம், அனுபவ அறிவை வளர்த்து, வருகின்றனர். எல்லா பாமரனையும் ஏமாற்றி விட முடியாது, இவர்களில் பலர் தெளிவுடனேயே செயற்படுகின்றனர். தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்கின்றார்கள். அறிவு பொதுவானது; யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. 

   வாழ்வியல் தரிசனம் 14/07/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .