2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 28/03/2016

Princiya Dixci   / 2016 மார்ச் 28 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எங்களைப் பூவாக மாற்றி புல்லரிக்க வைக்கும் சக்தி இசைக்கேயுரியது. ஆனால், தற்போது பாடப்படும் திரைப்படங்களின் சில பாடல்கள் எங்களைப் பூ நாகம் தீண்டியதுபோல், கொடிய விஷத்தினால் தாக்குண்டவர்கள் போலாக்கிவிட்டன. இளம் சமூகத்துக்கு மொழிகளின் அழகினைச் செழுமையினை அளிக்கக் கவிஞர்கள் முன்வரவேண்டும்.

இளம் பிஞ்சுகள், ஆபாசம் மிக்க பாடல்களின் அர்த்தம் புரியாமலே பாடுகின்றார்கள். இதனைப் பெற்றோரும் கூடி இரசிக்கின்றார்கள்.

மிகவும் ஆச்சரியமான விடயம் என்னவெனில், இத்தகைய வரிகளை எழுதும்போது எழுதுபவர்களின் எழுதுகோல் அழுவது இவர்களுக்குப் புரிவதில்லையா?

அதாவது, மனசாட்சி அவர்களுக்குள் புலம்புவதில்லையா, காசுக்காக என்னவும் செய்யலாமா?

இத்தகைய ஆபாசப் படங்கள் சுற்றாடல்களை மாசுப்படுதும் கிருமிகளை விடப்படுமோசமானவை.

இத்தகைய வரிகளை விரும்பிக் கேட்டும் நேயர்களே, கொஞ்சம் யோசியுங்கள், நல்ல இசை வடிவங்களை  கருத்தாளமிக்க பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். செந்தமிழ் பூக்களை நுகர்ந்து அனுபவியுங்கள்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .