2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நிகழ்காலத்தில் உலக பிரசித்தமான 10 சம்பவங்கள்

George   / 2014 ஒக்டோபர் 21 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் தினமும் ஆயிரக்கணக்கான சம்பவங்கள் இடம்பெற்றாலும் அதில் சில சம்பவங்கள் மடடுமே உலக அளவில் பிரசித்தமானதாக காணப்படும். அந்த வரிசையில் தற்போதைய மிக முக்கியமான 10 விடயங்களை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

01.பிரான்ஸின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கிரிஸ்டோப் மாஜரி, மாஸ்கோவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தார். இறக்கும்போது அவரது வயது 63.

02. பழம்பெரும் ஆடை வடிவமைப்பாளர் ஒஸ்கார் டி ரெண்டா புற்றுநோய் காரணமாக தனது 82ஆவது வயதில் உயிரிழந்தார்.

03. ஈராக் மற்றும் சிரியாவின் கோபானி நகரிலுள்ள குர்திஷ் இன மக்களுக்கு உதவிசெய்யவும் இஸ்லாமிய போராளிகளுக்கு எதிராக தாக்குதல் மேற்கொள்ளவும் துருக்கி அழைப்பு விடுத்தது.

04. ஒக்டோபர் மாத முற்பகுதியில், உக்ரைன் இராணுவம் தொகுப்பு வெடிப்பொருட்களை கொண்டு டுனெட்ஸ் நகரம் மீது தாக்கியது. நூற்றுக்கணக்கான சிறிய வெடிகுண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தி நியூயோர்க் டைம்ஸ்  உறுதிப்படுத்தியது.

05. சீனாவின் பொருளாதாரம் கடந்த ஆறு ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

06. இலவச தேர்தலில் ஏழை மக்களும் அரசியல் ஆதிக்கத்தை செலுத்த அனுமதிக்கப்படவேண்டும் என ஹொங்கொங் நாட்டு தலைவர் லியுங் சுன் யிங் கூறியுள்ளார்.

07. எபோலா நோயால் பாதிக்கப்பட்ட மேற்கு ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வெளிநாடுகளை நோக்கி செல்கின்றமை ஒவ்வொரு மாதமும் அதிகரித்துள்ளதாக வெளியான ஆய்வு முடிவுகள்.

08. எபோலா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பணியாளர்களுக்கான புதிய வழிக்காட்டியை அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டது.

09. எதிர்ப்பார்த்ததைவிட அப்பிள் ஐ-போன்களின் விற்பனை வருமானம் அதிகரித்ததுடன் ஐ-பேட்களின் விற்பனையில் வீழ்ச்சி.

10. தனது காதலியை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஓஸ்கார் பிஸ்டோரியஸூக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக...

பிரித்தானிய அரச பரம்பரையின் அடுத்த வாரிசை  கேட் மிடில்டன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பிரசவிப்பார் என்று வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .