2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கர்ப்ப கால உணவு முறை

A.P.Mathan   / 2010 ஜூலை 13 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்ப்பமாக இருக்கும் காலத்தில் பெண்கள் உணவு விடயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அந்தவகையில், எளிதில் சமிபாடு அடையக்கூடிய உணவுகளை மட்டுமே குறித்த காலத்தில் சாப்பிட வேண்டும்.

அத்துடன் எண்ணெய்ப் பசை, ஈரப்பசை இல்லாத வறண்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்கும் அதேவேளை புளிப்பு, உறைப்பான உணவு வகைகளையும் உண்ணாதிருக்க வேண்டும்.
 
மனதுக்குப் பிடித்த இனிப்பும் நெய்யும் கலந்த உணவுகளைச் சாப்பிடலாம். ஆனால், அவை பசியைத் தூண்டும் வகையில் அமைய வேண்டும். இதேவேளை, இரவுவேளை உணவினை விரைவில் சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்று விட வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் சாப்பிட வேண்டிய உணவுகள்:-
 
* முதல் மாதத்தில் சத்துள்ள உணவோடு, காலை- மாலை என இருவேளைகளில் காய்ச்சிய பாலை பருக வேண்டும்.
 
* இரண்டாவது மாதத்தில், பாலில் சுத்தம் செய்த உலர் திராட்சைகளை இட்டு காய்ச்சிக் குடிக்க வேண்டும்.
 
* மூன்றாவது மாதத்தில், காய்ச்சிய பாலோடு சிறிது நெய், சில துளிகள் தேன் கலந்து குடிக்க வேண்டும்.
 
* நான்காவது மாதத்தில் கரு, தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்வதால், தாய்க்கு உடல் பாரம் அதிகமாக இருக்கும். அப்போது, ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் 12 கிராம் வெண்ணை கலந்து பருக வேண்டும்.
 
* ஐந்தாவது மாத்தில் இருந்து ஏழாவது மாதம் வரை உப்பு, கொழுப்பு, குறைவான இனிப்பு நிறைந்த சத்தான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்.
 
* காலை- மாலை என இருவேளைகளிலும் ஒரு தேக்கரண்டி நெய் சாப்பிடலாம். வெறும் நெய் சாப்பிட முடியாதவர்கள் பத்து உலர் திராட்சைகளை அதில் கலந்து சாப்பிடலாம்.
 
* ஒன்பதாவது மாதம் பால் கஞ்சியில் நெய் கலந்து குடிக்க வேண்டும்.
 
முதல் மாதத்திலிருந்து ஒன்பதாவது மாதம் வரை இதேபோன்று உணவுப் பழக்கத்தைக் கொண்டிருந்தால், கர்ப்பிணி கருத்தரித்த காலத்தில் கருப்பை, வயிறு, இடை, முதுகு ஆகிய பகுதிகள் மென்மையாக இருக்கும்.

You May Also Like

  Comments - 0

  • HARIKESAN Thursday, 15 March 2012 06:51 AM

    idhu maathri tips niraiya enakku anuppunga pls........

    Reply : 0       0

    mano Thursday, 02 January 2014 04:18 PM

    குங்குமப்பூ சாப்பிடலாம்...

    Reply : 0       0

    Dhanalakshmi Friday, 09 May 2014 11:13 AM

    எனக்கு மிகவும் பயனுள்ள கருத்தாக இருந்தது.மிக்க நன்றி...

    Reply : 0       0

    nijam Sunday, 13 December 2015 10:22 AM

    Bayanulathu Neraya anupuka

    Reply : 0       0

    sathya Wednesday, 09 November 2016 09:16 AM

    நல்ல பயனுள்ள கருத்து

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .