2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.சுகா)

இன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் மது அருந்துதல், புகைத்தல் ஆகியன ஒரு பஷனாக மாறிவிட்ட நிலையில் விருந்துபசாரம் போன்ற களியாட்ட நிகழ்வுகளில் மதுபான வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன.  

ஏதாவது கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு வருமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தால் வைன்,  பியர், விஸ்கி, பிறண்டி வழங்கப்படுகின்றனவா என்று கேட்டுக்கொண்டே மேற்படி கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு பலர் ஒன்றுகூடும் களியாட்ட நிகழ்வுகளில் மது அருந்துதல் என்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது என்பதுடன், மது அருந்தாது விடுபவர்களை பட்டிக்காடு என்று நோக்கும் நிலையும் வந்துவிட்டது.

ஆனால்,  இவற்றால் எமது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புக்களை எவரும் சிந்தித்துப் பார்பதுமில்லை. அவ்வாறு சிந்திப்பவர்களின் புத்தியையும்  மது என்ற பானம் மயக்கி விடும்.

மது அருந்துதல், புகைத்தல் மற்றும் வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து உண்ணுதல் இந்த மூன்றும் எமது உடலுக்கு பாதகமானவையாகும்.

அளவுக்கதிகமான மதுபான வகைகளைப் பாவிப்பவர்களுக்கு நரம்புத்தளர்ச்சி, பாலியல்க்குறைபாடு, ஈரல் கரைதல் போன்ற நோய்களும் புகைப்பவர்களுக்கு சுவாசப் புற்றுநோய், நரம்புத்தளர்ச்சி, பாலியல்க்குறைபாடு போன்ற நோய்களும் வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுபவர்களுக்கு வாய்ப்புற்றுநோயும் ஏற்படுகின்றன.

இது தவிர, ஒருவர் புகைப்பிடிக்கும்போது அருகிலுள்ளவர்களும் தன்னிச்சையாக புகைப்பிடிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு தன்னிச்சையாக புகைப்பிடிப்பதற்கு  பெண்களும் விதிவிலக்கல்ல என்பதுடன்,  பெண்கள் தன்னிச்சை புகைத்தலுக்கு ஆளாகுவதால் அவர்களது சந்ததியினருக்கே ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது.

எமது நாட்டு அரசாங்கம் மது மற்றும் புகைத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக "மத்தட திட்ட" என்னும் மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி ஓரளவு வெற்றி கண்டது.

தற்போது மதுபாவனையால் ஏற்படும் நோய்களுக்கு 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து அரசாங்க வைத்தியசாலைகளில் இலவச சிகிச்சை வழங்கப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், அரசாங்கத்தின் இந்த நடமுறையானது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பதும் கேள்விக்குறியே.  

 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Sunday, 29 August 2010 08:45 PM

    மது அருந்துபவர்களால் மது அருந்தாதவர்கள் ஒதுக்கி வைக்கப்படுவார்களானால் மதுவை தடை செய்வது சரியே. விளம்பரத்தடைகள் ஓரளவு பலன் தருகின்றன. எங்களது விருந்துகளில் மது இல்லை என்று சொல்லுவதில் ஒரு பிற்போக்குத்தனமும் கிடையாது.மாறாக மதுவை வழங்கினால் தான் வருவார்கள் என்றால் அவர்களால் குழப்பமும் ஏற்படும் என்பது நிச்சயம். விருந்து முடிந்து வீடு திரும்பும் போதே அடித்துக்கொண்டு குருதி சிந்திக்கொள்ளும் காட்சிகளையும் காணலாம்.கொள்கையில் பிடிவாதம் வேண்டும். அதிகாரிகளுக்கு போத்தல் இலஞ்சம் கொடுக்கின்றவர்கள் அருந்தார்!

    Reply : 0       0

    sheen Tuesday, 31 August 2010 08:48 PM

    தான் மது அருந்தாதவர் மற்றவருக்கு ஒருகாரியத்தை செய்து கொள்ள மது வழங்குவார் என்றால் அதை உபசரணையாக கருதாமல் இலஞ்சமாகவே கருதவேண்டும்.அரசியல், வாக்குகளை பெறுவதற்கு மதுவை வழங்குகிறது ஆனால் ஒரு கோப்பை தேநீரை வழங்குவோரை/ பருகுகின்றவர்களை பழிக்கிறது! மதுவிலக்கு பழங்குடிகளுக்கு மட்டும் சலுகை வழங்கியது ஏனென்றால் அதை அவர்கள் வியாபார/ இலஞ்ச நோக்கமாக செய்வதில்லை என்பதால்.அதுபோல் மது தயாரித்துதானே பருகுகின்றவர்களையும் சட்டம் பிடிக்க முடிவதில்லை.மது ஆரோக்கியத்துக்காக பருகமுடியுமென்றால் அளவை நிர்ணயிக்க வேண்டும்!

    Reply : 0       0

    jivasutha Thursday, 16 September 2010 03:29 PM

    மதுவும் மாதும் போதையே. இதனால்தான் அனேகர் எதுவும் பார்க்காது வரையற்ற மதுவுக்கும் மாதுவுக்கும் சீக்கிரம் மயங்குகின்றனர். இது சகஜம்.

    Reply : 0       0

    Kesa Kana Friday, 15 October 2010 01:13 AM

    எதுவும் அளவோடு இருந்தால் சரி! ஆனால் என்ன செய்ய தொடங்கேக்க ஒன்று இரண்டு பெக் எண்டுதான் துவங்கிறம். அப்புறம் பாருங்கோ அதை முழுசா முடிச்சுட்டு கவிழ வேண்டி கிடக்கு!! காரணம் என்னண்டா முதலில நாம அதை குடிப்போம்...அப்புறம் அது நம்மை குடிசுடுமே....இதுதாங்கோ நம்மடை கனபேரிண்டை பிரச்னை பாருங்கோ!!!

    Reply : 0       0

    Kesavan Kanagarajah Friday, 08 July 2011 01:36 AM

    தாமே எல்லாம் செய்துகொண்டு, பிறருக்கு அறிவு புகட்டாமல் இருந்தால் சரி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .