2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தொழிலுக்கு அதிக நேரம் ஒதுக்குவதால் குடும்ப, சமூக வாழ்க்கையில் இழப்பா?

Kogilavani   / 2011 ஒக்டோபர் 18 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லர் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக  தொழில்புரியும் இடங்களில் கடுமையாக உழைப்பதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருப்பதால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு போதிய முக்கியத்துவம் வழங்க மறுத்துவிடுகின்றனர்.

வாழ்க்கைக்கு பணம் தேவைதான் என்றாலும் பணத்திலேயே அல்லது தொழில்ரீதியான பணியிலேயே குறியாக இருந்தால் அவர்களின் குடும்ப, சமூக வாழ்க்கை ஆட்டம் காணலாம்.

ஒருவர் உழைக்கக்கூடிய பருவத்தில் குடும்ப வாழ்க்கைக்காக அல்லது வாழ்க்கைக்கா அதிகம் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பது குறித்து வாதப்பிரதிவாதங்கள் உள்ளன.

"குறிப்பிட்ட வயதிலேயே உழைக்க முடியும். அதனால் உழைக்கும் பருவத்தில் உழைப்பிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்" என சிலர் கூறுகின்றனர்.

ஆனால் மற்றொரு தரப்பினர் வேலையைவிட குடும்ப சமூக வாழ்க்கை முக்கியம் என்கின்றனர். தமது கருத்தை வலுப்படுத்துவதற்கு அவர்கள் சுட்டிக்காட்டும் விடயங்கள் சில பின்வருமாறு:-

* வேலையென்பது  ஒருபோதும் முடிவுறும் செயன்முறை அல்ல. உங்களால் எப்போதுமே உங்களது வேலைகளை செய்து முடிக்க முடியாது.

உங்கள் வாடிக்கையாளரின் நலன் என்பது உங்கள் குடும்பத்தின் நலன்களைவிட முக்கியமானதல்ல.

நீங்கள் வாழ்க்கையில் தோல்வியை தழுவும் போது கைகொடுக்கும் உங்களுக்கு கைகொடுக்கப்போவது உங்களது முதலாளியோ தொழிலாளியோ அல்ல. ஆனால்,  குடும்பத்தினரும் நண்பர்களும் உதவுவார்கள்.

* வாழ்க்கை என்பது அலுவலகத்திற்கு தினம் வருவதும், வீட்டிற்கு செல்வதும் நித்திரை கொள்வதும் அல்ல. ஒரு வாழ்க்கையில் இதைவிட அதிகமான விடயங்கள் உள்ளன. சமூகமயமாகுவதற்கு, கேளிக்கை பொழுது போக்குகளில் ஈடுபடுவதற்கு, உடற்பயிற்சிக்கு, ஓய்வுக்கு என உங்களுக்கு நேரம் வேண்டும். உங்கள் வாழ்க்கையை அர்த்தமற்றதாக மாற்றிக்கொள்ளாதீர்கள்.

* ஒரு நபர் கண்விழித்து இரவு முழுதும் வேலை செய்பவராக இருந்தால் அவர் கடுமையாக உழைப்பவரென்று அர்த்தமில்லை. அவர் தனது வேலையை குறிப்பிட்ட நேர வரையறையில் திட்டமிட்டு சரியாக நிர்வகித்துக்கொள்ள தெரியவில்லை என்று அர்த்தம். அவர்  சொந்த மற்றும் சமூக வாழ்க்கை என்று எதுவுமில்லாத  தோல்வியடைந்த ஒருவரென்று அர்த்தம். 

* நீங்கள் கடுமையாக படித்ததும் வாழ்க்கையில் போராடியதும்  இயந்திரமயமான அர்த்தமற்ற ஒரு வாழ்க்கைக்காக அல்ல.

நாம் அதிகம் நேரத்தை ஒதுக்க வேண்டியது உழைப்பிற்கா அல்லது குடும்பத்திற்கா? சிந்தியுங்கள் வாசகர்களே.


You May Also Like

  Comments - 0

  • Ramesh Wednesday, 19 October 2011 07:26 PM

    உறவினர்களும் நண்பர்களும் காசு இல்லாவிட்டால் காணாமல் போய்விடமாட்டார்களா?

    Reply : 0       0

    xlntgson Wednesday, 19 October 2011 09:16 PM

    Ramesh நல்ல கருத்துதான். ஆனால் ஒரு நிமிடமானாலும் மகிழ்ச்சியாக இருக்க செலவு இல்லா/ செலவு குறைந்த சுகங்களை பற்றியே நமது மனம் சிந்திக்கிறது. சூழ்ச்சி என்னவென்றால் உங்களுக்கு சில அற்ப சுகங்களைக் காட்டி, அதற்கு உங்கள் வருவாயெல்லாம் செலவாக வேண்டும் என்பதே. அதற்கு தக்க துப்பறியும் விதங்களும் அதிகம். நீங்களாகவே உங்கள் இருப்பை சொல்வீர்கள், உங்கள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள! நீங்கள் ஒரு பொருளை வாங்கவும் நீங்கள் என்ன விலையில் பார்க்கின்றீர்கள் என்ற கேள்வியிலேயே நீங்கள் முற்கூட்டியே judge தீர்மானிக்கப்பட்டு விடுவீர்கள்.

    Reply : 0       0

    Risvi Thursday, 20 October 2011 05:09 AM

    பணம் முக்கியம்தான். ஆனால் குடும்பத்தை மறந்துவிட்டு வேலையே கதியென்று கிடப்பது நல்லதல்ல.

    Reply : 0       0

    Mohamed Haleem Wednesday, 16 November 2011 04:16 PM

    ரிஸ்வி சொன்ன கருத்து மிகவும் சரியானது.

    Reply : 0       0

    JIfriya Jaufar Tuesday, 20 December 2011 06:08 PM

    உழைப்பு என்பது நம்மை வாழ வைப்பது மாத்திரம்தான்
    உழைப்பிற்கான உட்சாகம் நம் உறவுகளில்தான் துவங்குகின்றன

    Reply : 0       0

    Ram Sunday, 14 July 2013 07:05 AM

    நல்ல கருத்து................

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .