2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

35 வயதுக்கு மேல் கர்ப்பம் தரித்தால் பிரச்சினை; வைத்தியர் லோஷன்

Super User   / 2011 ஜூன் 14 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

முப்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கர்ப்பம் தரிக்கும் பட்சத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என குடும்ப சுகாதார பேரவையின் ஆலோசகரான வைத்திய கலாநிதி லோஷன் முனசிங்க இன்று தெரிவித்தார்.

இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படுவதுடன் குறித்த பெண்களும் பிரசவத்தின் போது சிரமங்களை எதிர்நோக்க நோக்குவார்கள் என அவர் கூறினார்.

குடும்ப கட்டுப்பாட்டு சங்கத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

"இவ்வாறான 35 வயதுக்கு பின்னர் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் குறை வளர்ச்சியுடன் பிறப்பதுடன் பல குறைபாட்டு நோய்களுக்கும் உள்ளாவர். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது" என வைத்திய கலாநிதி லோஷன் முனசிங்க தெரிவித்தார்.
 .
இதேவேளை, 18 வயதிற்கு குறைவான பெண்கள் கர்ப்பம் தரிக்கும் பட்சத்தில் அந்தப் பெண்ணும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் மேற்படி ஆபத்துக்களுக்கு முகங்கொடுக்ககூடிய வாய்ப்புக்கள் அதிகம் எனவும் அவர் கூறினார்.

பதினெட்டு வயதிலும் குறைந்த கர்ப்பம் தரித்த பெண், 20 – 25 வயதில் கர்ப்பம் தரிக்கும் பெண்ணை விட பிரசவத்தின் போது மரணிக்கும் வாய்ப்பு 2 – 5 மடங்கு அதிகம் என அவர் குறிப்பிட்டார்.
 
"ஒரு பிள்ளை கிடைத்து மூன்று தொடக்கம் ஐந்து வருடங்களுக்குள்ளேயே அடுத்த பிள்ளைக்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டுமே தவிர, மூன்று வருடங்களுக்குள் முயற்சிக்க வேண்டாம். இதனூடாக பெற்றோர்கள் பிள்ளையுடன் அதிக நேரத்தை செலவிட்டு அன்பு காட்ட முடியும்" என வைத்திய கலாநிதி லோஷன் முனசிங்க மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • xlntgson 0776994341;0716597735 sms only Wednesday, 15 June 2011 09:23 PM

    விஞ்ஞானம் முன்னேறிய இந்த காலத்திலும் பெண்களை இவ்வாறு பயமுறுத்துவது சரியில்லை. மேற்கில் கிழவிகள் கூட பிள்ளை பெற்றுக்கொள்கிறார்களே அது என்ன மருத்துவ முன்னேற்றம்?

    Reply : 0       0

    nawas mohammed Friday, 17 June 2011 03:41 PM

    இலங்கை வைத்தியர்களுக்க்த்தான் இந்த அச்சம் ,சும்மா ரீல் விடாம இரீங்க சார்.இறைவன் நாடினால் தொன்னூரிலும் குழந்தை பெறலாம்.

    Reply : 0       1

    anban Thursday, 07 July 2011 10:19 AM

    மேற்கத்திய நாடுகளில் இரண்டுக்கு மேல் குழந்தை பெற்றால் அவர்களுக்கு வயது வித்தியாசம் இன்றி மானியம் வழங்கப்படும் என்கிறது. அறுபத்தி ஐந்து வயதில் குழந்தை பெற்றவருக்கு ஊரெல்லாம் புகழாரம்.தாயும் சேயும் நலம் என்கிறது பத்திரிகைச் செய்தி. இது விஞ்ஞானிகள் அதிகம் வாழும் நாட்டு அரசாங்க செய்தி.சில பெண்கள் நாற்பது வயதிலும் இருபது வயது போல் உற்சாகமாக இருப்பார்கள். அவர்களால் சாதரணமாக குழந்தை பெற முடியும்.இது இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட பெரும் பாக்கியம். வைத்தியர் ஐயாவை உலக செய்தி படிக்க சொல்லுங்கள்.35 வயதில் திருமணம் முடித்த பெண்ணுக்கு 47 வயதுக்குள் பல ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றுள்ளதை வைத்தியரும் அறிந்திருப்பார்.

    Reply : 0       0

    NAKKIRAN Thursday, 04 August 2011 12:07 PM

    தமிழை நன்றாக புரிந்து கொண்டு கருத்து சொல்லுங்கள். தாயும் சேயும் ஆபத்துகளை தவிர்க்கலாம் , ஆரோக்கியமாக
    இருக்கலாம்.

    Reply : 0       0

    janani Wednesday, 24 August 2011 09:06 PM

    8 ,10 ,குழந்தை பெற்ற அதிக பெண்களை நலமாக வாழ்வதை காணலாம்,1 ,2 ,பெற்ற அதிக பெண்கள் சுகர் பெசர் குக்கர் என்று இன்று அதிகம் அலைகிறார்கள் இதற்கு பெயர்தான் ஆரோக்கியமோ?? அதிகமான மேற்கத்திய பெண்கள் 33 லிருந்து 42 க்குள் குழந்தை பெறுகிறார்கள்.நம் நாட்டு பெண்களை விட இவர்கள் என்ன ஆரோக்கியம் குறைந்தவர்களாகவா நண்பருக்கும் வைத்தியருக்கும் தெரிகிறார்கள்?? நிரூபிக்கப்பட்ட உண்மைகளை மட்டும் சொல்லுங்கள். தியரிகளை சொல்லி மக்களை குழப்புவதை விடுங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X