2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

செல்வச் சந்நிதியான் ஆலய வருடாந்த திருவிழா

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 09 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தொண்டைமானாறு, செல்வச்சந்நிதியான் ஆலய வருடாந்த திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை காலை 9மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவள்ளது. மறுநாள் புதன்கிழமை காலை 6 மணிக்குச் சங்குப்ப+சையும் காலை 8 மணிக்கு சங்காபிசேகமும் முற்பகல் 9.30 மணிக்கு சண்முக அர்ச்சனையும் இடம்பெற்று மாலை சுவாமி வீதியுலா வருவார்.

தொடர்ந்து திருவிழா இடம்பெற்று எதிர்வரும் 18ஆம் திகதி 10ஆம் திருவிழா விசேமாக இடம்பெறும். அன்று முற்பகல் 10 மணிக்கு முருகப் பெருமானுக்கு ப+ங்காவனத் திருவிழா இடம்பெறும். மறுநாள் 19ஆம் திகதி 11ஆம் திருவிழாவன்று காலை 8 மணிக்கு கைலாசவாகனம் இடம்பெறும்.

எதிர்வரும்  22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சப்பரத்திருவிழா இடம்பெறும். மறுநாள் 23 ஆம்திகதி திங்கட்கிழமை காலை 8 மணிக்குத் தேர்த்திருவிழா இடம்பெறும். காலை விசேட ப+சை தீபாராதனைகள் இடம்பெற்று சுவாமி 8 மணியளவில் தேரில் ஏறி வீதியுலா வருவார். 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு தீர்த்தத்திருவிழா இடம்பெறும். அன்று மாலை கொடியிறக்கமும் மௌனத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

பரிபாலன சபைத் தலைவர் ஆ.சிவசண்முக ஐயர் விடுத்த செய்தியில், மக்கள் அனைவரும் எமது கலாசாரம் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் ஆலயத்துக்கு வருகை தருதல் அவசியம். பண்பாடு கலாசாரம் என்பவற்றை மக்கள் பேணுவார்கள் என நம்புகின்றேன்.

மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் குடிதண்ணீர் மற்றும் போக்குவரத்து சுகாதார வசதிகள் உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு திருவிழாக் காலங்களில் மக்கள் வந்து தங்கி நிற்கக்கூடிய வகையில் மடங்கள் எவையும் போதிய வசதிகளுடன் இல்லை. இது எமக்கு ஒரு குறைபாடாகவே காணப்படுகின்றது.

அதுமட்டுமன்றி ஆலயத்துக்கு அச்சுவேலியூடான போக்குவத்துக்கு அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் பாதை திறக்கப்பட்டுள்ள போதும்  குறித்த ஒரு இடத்தில் முற்று முழுதாக விதி திறந்து விடப்படவில்லை. எனினும் இந்த வீதி திறக்கப்பட்டுள்ளமை எமக்கு இந்தத் திருவிழாக் காலத்தில் மக்கள் ஆலயத்துக்கு அதிகம் வருகைதரும் நாள்களில் மிகவும் வசதியாகவும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

பரிபாலன சபைச் செயலாளர் வி.தெய்வேந்திர ஐயர் இது குறித்து கூறுகையில், ஆலய திருவிழாக் காலங்களில் ஆலய சுற்றாடலில் செய்யப்படவேண்டிய சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன. ஆலயச் சுற்றாடலில் மணல் பறித்தல் வேண்டும் என்று மகேஸ்வரி நிதியத்தினரிடம் நாம் கேட்டுக் கொண்டதுக்கிணங்க அவர்கள் 25 லொறி மணலை இன்று இங்கு கொண்டுவந்து தந்துள்ளனர்.

தேர்த் திருவிழாவன்றும் ஆலயச் சூழலில் மண் பறிப்பதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். திருவிழாக்காலங்களில் ஆலயச் சுற்றாடலில் தற்போது அமைந்துள்ள 15 மடங்களில் திருவிழாக் காலங்களில் அன்னதானம் இடம்பெறும்.  அதுமட்டுமன்றி ஆலயத்திலும் தினமும் அன்னதானம் இடம்பெறும். மக்களுக்குத் தேவைக்கு ஏற்றவாறு அன்னதானம் வழங்ஙகப்படும்.

ஆலயத்தில் அவ்வப்போது புனரமைப்புப் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. ஆலயத்தின் உள்மண்டபம் சரஸ்வதி மண்டபம் என்பவை தற்போது அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் திருப்பணி வேலைகள் இடம்பெறும் என்றார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .