2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மண்கும்பான் பள்ளிவாசல் கொடியேற்றம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ்ப்பாணம் வெள்ளைக் கடற்கரை மண்கும்பான் பள்ளிவாசலின் கொடியேற்ற நிகழ்வு எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அன்றைய தின அஸர் தொழுகையின் பின்னர் கொடியேற்றலுடன் ஆரம்பமாகி  மஃரிப் தொழுகையினை அடுத்து மௌலூத்உம் தலைசிறந்த மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் 11 நாட்களுக்கு நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வானது மண்கும்பான் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள சங்கைக்குரிய அஸ்-ஸெய்யித், அஷ-nஷய்க் சுல்தான் அப்துல் காதர்(றஹ்) ஞாபகார்த்தமாக வருடாவருடம் இடம்பெறுகின்ற வரலாற்று மிக்கதாகும்.

தொடர்ந்து இறுதி நாளான ஹ மே மாதம் 12ம் திகதியன்று காலை 7.30 மணிக்கு குர்ஆன் தமாமும், துஆ பிராத்தனையும் நடைபெற்று பகல் நாரிசாவும் வழங்கப்படவுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .