2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய கங்காணர்போடி திருவிழா

Thipaan   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

 மட்டக்களப்பு சித்தாண்டி ஸ்ரீ வள்ளி குஞ்சரி சமேத ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி பேராலய வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் ஐந்தாம் நாள் கங்காணர்போடி திருவிழாவின் திருவிளக்கு பூசை புதன்கிழமை (19)  இரவு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

 நடைபெற்ற திருவிளக்கு பூசை, பிரம்மோற்சவ பிரதம குரு தருமை ஆகமப்பிரவீனா, ஆசீர்வாத சரபம் சிவஸ்ரீ. கைலாசநாத வாமதேவக் குருக்கள் (யாழ் - நயினை ஸ்ரீ நாகபூசணியம்மன் பேராலய ஆதீனகுரு) மற்றும் ஆலய ஸ்தானிக குரு

சிவஸ்ரீ.க. குகன் குருக்கள் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இங்கு நூற்றுக்கு மேற்பட்ட கன்னிப்பெண்கள் திருவிளக்கு பூசைக்கு கலந்துகொண்டு தங்களின் வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன் ஆலய உள் வீதி மற்றும் வெளி வீதியிலும் கலந்துகொண்டு நடைபெற்ற பூசை வழிபாடுகளிலும் கலந்துகொண்டனர்.

 வருடாந்தம் நடைபெறும் கங்காணர்போடி திருவிழா மிகவும் சிறப்பான முறையிலே நடைபெற்றுவருகின்றது. அந்தவகையில் நேற்று நடைபெற்ற ஐந்தாம் நாள் திருவிழாவின் காலை 8.00 மணிக்கு சங்கற்பம், ஸ்நபன கும்ப பூசைகள், அபிசேகம், மூலவர் பூசை, யாக பூசை, ஸ்தம்ப பூசை, வசந்த மண்டப பூசை, சுவாமி உள் வீதி உலா என்பன இடம்பெற்று நண்பகல் 12.00 மணிக்கு பகல்வேளை உற்சவம் என்பன நிறைவடைந்து இரவுவேளை விசேடமாக இவ் திருவிளக்கு பூசை நடைபெற்றது.

 நடைபெற்ற ஐந்தாம் திருவிழாவின்போது சுவாமி வசந்த மண்டபத்திலிருந்து எழுந்தருளி அலங்கரிக்கப்பட்ட சப்புரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சிகொடுத்தார். இதன்போது பெரும் திரளான பக்தர்கள் பல இடங்களில் இருந்து திருவிளக்கு திருவிழா காண வருகை தந்திருந்தனர்.

ஆலயத்தின் உற்சவ பெருவிழா இறுதி நாளாகிய ஆவணித் திங்கள் 12ஆம் நாள் (29.08.2015) சனிக்கிழமை ஆவணி பௌர்ணமி நன்நாளில் தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவுபெற்று அன்று மாலை 5.00 மணிக்கு கொடியிறக்கத்துடன் இவ்வாண்டுக்கான உற்சவ பெருவிழா நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X