2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உருகும் பனிக்கட்டிகள்! சென்னை, மும்பைக்கு ஆபத்து?

Editorial   / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் இந்தியா பெரும் ஆபத்தில் இருப்பதாக ஏற்கனவே ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்ரஸ் தெரிவித்திருந்தார். 

கடந்த மாதம் தாய்லாந்தின் பாங்காங்கில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஐ.நா பொதுச்செயலாளர் குட்ரஸ் முன்பு கணிக்கப்பட்டதை விட தற்போது கடல் மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாக, கிளைமேட் சென்ட்ரல் எனும் பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் அமைப்பின் அண்மைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

மேலும் பூமியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும், வரும் 2050-ம் ஆண்டுக்குள் 45 சதவீத அளவுக்கு கரியமில வாயு கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தாரட.

அத்துடன்.  புவி வெப்பமயமாவதால், இந்தியா, சீனா, ஜப்பான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். தாய்லாந்தில் 10 சதவீத மக்கள் வசிக்கும் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் என்றும் குட்ரஸ் கூறியிருந்தார். 

இந்தநிலையில், கிரீன்லாந்து தீவில் கடந்த 19990-களில் இருந்ததைவிட தற்போது 7 மடங்கு அதிகமாக பனிக்கட்டிகள் உருகி வருவதாக செயற்கை கோள் பதிவுகளை ஆய்வு செய்த சர்வதேச அளவிலான துருவ பகுதிகளில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பில் தெரியவந்துள்ளது.  

கிரீன்லாந்தில் உருகும் பனிக்கட்டிகளால் மட்டும் இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக அளவில் கிட்டத்தட்ட 7 செ.மீ. அளவுக்கு கடல் மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X