2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கால்விரல்களால் பியானோ வாசிக்கும் இசை கலைஞர்

Kogilavani   / 2010 ஓகஸ்ட் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

இரண்டு கைகளையும் தனது சிறு பராயத்திலேயே இழந்த சீனாவைச் சேர்ந்த ஒருவர், கால் விரல்களால் பியானோ வாசித்து இசை கலைஞராகப் புகழ்பெற்றுள்ளார்.

லியூ வெய் (Liu Wei) என்பவரே இவ்வாறு கால் விரல்களால் பியானோ வாசிப்பாளராகியுள்ளார்.

'சைனாஸ் கொட் டலென்ட்' (China's Got Talent) எனும் நிகழ்ச்சியில் பங்குபற்றிய அவர், காலுறையை நீக்கிவிட்டு தனது கால்விரல்களால் பியானோ வாசிக்கத் தொடங்கிய போது  'பார்வையாளரின் வரவேற்பில் அரங்கம் அதிர்ந்தது' என ஊடகம் ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.

'மற்றவர்கள் தங்களது கரங்களால்  செய்யும் எதையும்  நான் எனது கால்களால் செய்வேன்' என லியூ வெய் தெரிவித்துள்ளார்.

தற்போது 23 வயதான அவர், 10 வயது சிறுவனாக இருக்கும் போது தனது கைகளை இழந்துள்ளார். அதன் பின் அவர் அனைத்துத் தேவைகளுக்கும் தனது கால்விரல்களையே பயன்படுத்திக்கொண்டார். முக்கியமாக இணையத்தள பாவனை, உணவு உண்பது, ஆடைகள் அணிவது, பல்துலக்குவது போன்ற அனைத்து தேவைகளுக்கும் தனது கால்விரல்களையே பயன்படுத்தியுள்ளார்.

உல்லாசமாக சென்று, நான் வாகனம் ஓட்டுவதற்கு இயல வேண்டும் என விரும்புகின்றேன். உண்மையில் அதை தவிர நான் செய்ய விரும்பும் வேறு விடயம்  எதுவும் இல்லை.  என்று  தெரிவித்துள்ளார்.

பீஜிங்கில் வசித்து வரும் அவர்  'இசை எனக்கு சுவாசம் போன்றது' என்று தெரிவித்துள்ளார்.

அவரது முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது பார்வையாளர்கள் எழுந்து நின்று கௌரவித்தனர்.  அதேவேளை அதிகமான பார்வையாளர்கள் அவரைப் பார்த்து கண்ணீர் சிந்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .