2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஸ்பெய்ன் விலைமாதர்களுக்கு விசித்திர உத்தரவு

Super User   / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெய்ன் நாட்டின் நகரமொன்றில் வீதிகளில் வாடிக்கையாளர்களை எதிர்பார்த்துத் திரியும் விலைமாதர்கள் ஒளியை தெறிப்படைச் செய்யும் மேலாடையை அணியவேண்டுமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.
 

வேகமாக வரும் வாகனங்கள் விலைமாதர்கள் மீது மோதிவிடாமல் இருப்பதற்காகத்தான் இந்த ஏற்பாடாம்.
 

எல்ஸ் அலாமஸ் எனும் நகருக்கு வெளியேயுள்ள விலைமாதர்களுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த உத்தரவை மீறுவோருக்கு 40 யூரோ அபராதம் விதிக்கப்படுகிறது.


'அவர்களின் பாலியல் தொழில் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. மாறாக அவர்கள் வீதிகளில் நிற்பது சாரதிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதனால்தான் இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது' என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பிராந்திய பொலிஸ் பேச்சாளர் ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், 'கடந்த சில மாதங்களில் விலை மாதர்கள் இரு காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டனர். முதலாவது காரணம் ஒளிதெறிக்கும் ஜக்கட் அணியாமையாகும். இரண்டாவது காரணம் நெடுஞ்சாலைகளில் அபாயங்களை ஏற்படுத்தியமையாகும்' என்றார்.


ஸ்பெய்னில் சுமார் 3 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கொண்ட ஆய்வின்போது, அந்நாட்டில் நான்கில் ஒரு பங்கு ஆண்கள் பணம்கொடுத்து பாலியல் சேவைகளை பெற்றுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளனர். என்னே சீரழிவு!
 


You May Also Like

  Comments - 0

  • alga Wednesday, 27 October 2010 12:44 PM

    அங்கே சீரழிய ஒண்டும் இல்லை, இங்கேதான் சீரழிவு கற்பழிப்பு கடத்தல் கொலை என பெண்களுக்கு. பொதுவாக பார்த்தால் பிரதான பிரச்சினை இதுதான்.

    Reply : 0       0

    asokan Wednesday, 27 October 2010 04:48 PM

    நல்ல சட்டம், காம வெரியருக்கு

    Reply : 0       0

    sooriyan Wednesday, 27 October 2010 06:52 PM

    என்ன சீரழிவு ? ..................................................................................................

    Reply : 0       0

    Fahim Thursday, 28 October 2010 04:31 AM

    அவர்கள்தான் நாகரிகத்தின் முன்னோடிகளாகத் தங்களைக் கருதிக் கொண்டிருக்கிறார்கள்! அறிவு கெட்டவர்கள்! சீ...!!!

    Reply : 0       0

    xlntgson Thursday, 28 October 2010 08:52 PM

    viyabichaaram sattappadiyaana naadugalil immaadhiriyaana kattuppaadugal undu,
    adhu viyabichaaratthai kaakkavenru kolvadhaanaal adhil eedupadubavargalaiyaa alladhu adhai vaitthu pilaikkinravargalaiyaa enru enakku theriyavillai. arasukku varumaanam varum enbadharkka?
    40vayadhuku merpatta pengaluku thevai enraal viyabichchaaram seyya sattam anumadhikkalaam adhanaal ilambengal @'alga' koorum pirachchinaigalilirundhu thappalaam. aanaal adharku uttharavaadham edhum illai madhappadippugalinaal palan?

    Reply : 0       0

    nnassm Friday, 29 October 2010 03:09 AM

    ஒரு வகையில் இது சரியானது,நமது நாட்டில் இப்படி இல்லாத காரணத்தால் கற்பழிப்பும்,பாலியல் குற்றம்களும் அதிகம்.

    Reply : 0       0

    xlntgson Friday, 29 October 2010 08:57 PM

    40க்கு மேற்பட்ட வயதினருக்கு விபச்சாரம் சட்டபூர்வமாக்கப் படலாம் என்ற எனது கருத்துக்கு ஒருவர் நீர் ஒரு முஸ்லிமா என்று கோபம் கோபமாக ஒரு மின்னஞ்சலை அனுப்பி இருக்கிறார், அவருக்கு நான் தனியே பதில் அனுப்பினாலும் கூட எல்லார் பார்வைக்கும் இதை நான் முன் வைக்கின்றேன்:
    இப்போது விபசாரம் நடக்காமலா?
    அதில் பங்குபற்றுபவர்கள் தானே பங்குபற்றுகின்றனர். எல்லாரும் அதற்கு போவரா?
    வேறொரு இணையத்தில் இதே கருத்தை நான் முன்வைத்த போது ஒருவர் நாற்பதின்மரை முட்கள் என்றும் எலும்பு என்றும் வர்ணித்தார், என்ன பொருளோ?
    சவ்சவாம்!

    Reply : 0       0

    xlntgson Saturday, 30 October 2010 08:11 PM

    இன்னும் ஒருவர் நான் 40+வயதுக்கு மையல் என்றும் ஏன் எனக்கு 40+வயது பெண்களை பற்றி தவறான எண்ணம் என்றும்
    முதல் நகைச்சுவையை நான் இரசிக்கின்றேன் என்றாலும் இரண்டாவது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.
    நான் மிகவும் சுத்தமானவன். விபசாரத்தின் பக்கம் தலை வைத்தும் படுத்ததில்லை அந்த எண்ணமே இல்லாத சுத்தவான்.
    இந்த மாதிரியான நிழல் படியும் என்றால் எவராலும் கருத்து சொல்லவே முடியாது .
    முஸ்லிம்களுக்கு முஸ்லிம்களை பற்றித்தான் கருத்து சொல்ல முடியும் என்றும் எல்லா இனத்தவரை பற்றியும் அவர்கள் பேச இயலாதென்றும் ஒரு வீட்டோ கூட!

    Reply : 0       0

    bin mullaa Monday, 08 November 2010 01:44 AM

    இங்கே நமது நாட்டில் அந்த நிற jacket இல் போலிசை ஐ பார்த்து தான் மக்கள் பயப்படுகின்றனர். நமது நாட்டு பாலியல் தொழிலாளிகளை jacket உடன் கற்பனை செய்து பாருங்கள். ஆஹா ஆஹா. இதில் வந்திருக்கும் படமும் சும்மா அப்படி! என்ன?

    Reply : 0       0

    the bullet Monday, 08 November 2010 12:39 PM

    நல்ல ஒரு சட்டம்.....நாட்டுக்கு இப்ப ரொம்ப முக்கியம்.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X