2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வீரர்களின் ஈடுபாடு போதாது

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச.விமலச்சந்திரன் (விமல்) 


தமிழர்களின் விளையாட்டு எதிர்காலம் கேள்விக்குறியான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஏன் சென்றுவிட்டது என்றே சொல்லலாம். இந்த விளையாட்டு வீழ்ச்சி கல்வியை வளர்த்துள்ளதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. இந்த வீழ்ச்சி 

வளர்த்துவிட்டுள்ள விடயங்கள் பல. கலாசாரச் சீரழிவு.ஆளுமையற்ற ஒரு சமூகம். ஆரோக்கியமற்ற மனிதர்கள். இன்னும் பலவற்றை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

ஏன் இந்த நிலை? ஒரு தசாப்த காலத்துக்கு முன்னர் போட்டிகளில் பங்குபற்ற

முடியவில்லை. ஆனால் திறமையானர்வர்கள் இருந்தார்கள். அவர்களுக்குத் தளம் கிடைக்கவில்லை மற்றும் சாதிக்கவில்லை என்ற இரண்டு ஒப்பீடுகளை எடுகோளாக எடுக்க முடியாது.  

 சமகாலத்தில் விளையாட்டில் வீழ்ச்சி அடைந்துள்ளோம் என்பதனை உண்மையென ஏற்றுக்கொள்ள வேண்டும். அது ஏன் என தேடவேண்டும். பல காரணிகள் இங்கே

உள்ளன. உச்சப் புள்ளி தொடக்கம், கடைசிப் புள்ளி வரை காரணங்கள் உள்ளன. அவை சீர் செய்யப்படவேண்டும். அது அவ்வளவு இலகுவானதல்ல. மிகக் கடுமையாக அதற்கு உழைக்க வேண்டும். வீரர்கள் மட்டுமே உழைத்தால் போதாது.

ஒட்டுமொத்த வலையமைப்பும் உழைக்க வேண்டும். இது சாத்தியமா?

போட்டிகள்,பொறாமைகள், யார் பெரியவன் என்ற போட்டிகள், பொருத்தமற்றவர்கள் பொருத்தமற்ற இடங்களில் பதவிகளில், முழுமையான வசதி வாய்ப்புகள் இல்லை, உரிய விளையாட்டுக்கான பயிற்சியாளர்கள் இல்லை எனப்

பல காரணங்களைக் கூறிக்கொண்டு செல்ல முடியும். விளையாட்டுத்துறை அரச துறைக்குள்ளேயே இருப்பது பற்றிக்கூட இங்கே சிந்திக்க வேண்டும். வேலைக்கு

போனால் வந்தால் போதும் என கடமையாற்றும் அதிகாரிகள் இங்கே விளையாட்டின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைக்கிறார்கள். இவர்களினால் விளையாட்டை,

விளையாட்டு வீரர்களை வளர்க்கும் கனவோடு தொழிற்படும் அதிகாரிகளும் சோர்ந்து போய்விடுகிறார்கள். சங்கங்களின் மூலம் செயற்படும் விளையாட்டுகளில்

வளர்ந்துள்ளோமோ என்று கேட்டால் அதுவும் இல்லைதானே. ஆக இதற்கெல்லாம் என்ன செய்வது? பதில் தெரிந்திருந்தால் இன்று நாங்களும் பல சர்வதேச

பதக்கங்களை வென்று காட்டியிருப்போமே? அல்லது தேசிய அணியில் விளையாடி சர்வதேச ரீதியில் ஏதாவது சாதனை செய்திருப்போமே?  

 விளையாட்டு என்பது முதலில் வீர, வீராங்கனைகளுக்கானது. அவர்கள்

ஈடுபாட்டுடன் பங்குபற்றினால் மட்டுமே பயிற்று விப்பாளர்களும், முகாமைத்துவம் சார்ந்தவர்களும் அவர்களை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்ல முடியும்.

வீரர்கள் சரியான பயிற்சிகளைப் பெறவும், ஆர்வத்துடன் பங்குபற்றினால் அவர்களைப்

பின்னர் உயரத்துக்கு அழைத்துச் செல்ல முடியும். சிறு வயது முதல் பிள்ளைகளுக்கு விளையாட்டின் மீதான ஆர்வத்தை பெற்றோர்கள் உருவாக்க வேண்டும்.

ஆனால், இப்போது அவ்வாறான நிலையில்லை. பிள்ளைகள் விளையாட வேண்டிய வயதில்

விளையாடுதோ இல்லையோ கல்வி என்ற அதீத அழுத்தத்துக்கு உள்ளா கிறார்கள். பிள்ளைகள் மீதான தேவையற்ற இவ்வாறான அழுத்தங்கள் அவர்கள்

விளையாட்டுத் திறமையை மட்டுமல்ல நல்ல ஆளுமை மிக்க மனிதனாக உருவாகுவதையும் தடுக்கிறது.  

 பயிற்றுவிப்பாளர் ஒரு குறிக்கோளோடு செயற்பட்டால், இலக்கு வைத்தால் வீர,வீராங்கனைகளை வெற்றி பெறச் செய்ய முடியும். சர்வதேச ரீதியில்

பயிற்றுவிப்பாளர் களினால் சாதித்த வீர,வீராங்கனைகளும் உள்ளனர். அணிகளும்

உள்ளன. அதே போல் தோல்வியடைந்தவர்களும் உள்ளனர். ஆக பயிற்றுவிப்பாளர் என்பவர் விளையாட்டில் முக்கிய இடம்பிடிக்கிறார். அந்த வகையில் வட மாகாண

பூப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் தவராஜா கமலன் இரண்டு மூன்று வருடங்களில் வட மாகாணத்திலிருந்து பூப்பந்தாட்டத்தில் தேசிய ரீதியில் வெற்றிகளை பெற முடியுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதேவேளை பூப்பந்து

விளையாடுபவர்களில் அநேகமானவர்கள் வைத்தி யர்கள், பொறியிலாளர்கள் எனவும் அவர் இது பற்றி மேலும் தகவல்கள் தெரிவிக்கையில் கூறிய

விடயங்களைப்பார்ப்போம்.  

 கே;       வடக்கு, கிழக்கு மற்றும் தமிழர் பிரதேசங்களில் விளையாட்டு அபிவிருத்தி போதியளவில் இல்லை. இதற்கான காரணம் என்ன?  

 ப : எங்களுடைய வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தளவில் விளையாட்டில் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றக் கூடிய தரத்தில் வீரர்கள்

இருந்தாலும் அவர்களுக்கான போதிய பயிற்சிகளைப் பெறக்கூடிய முழுமையான

வசதிகள் குறைபாடாகத்தான் காணப்படுகிறது. அத்தோடு, அந்த பயிற்சிகளைப்

பெறுபவர்கள், தொடர்ச்சியான பயிற்சிகளைப் பெறாமல் இருக்கும் காரணத்தால்

தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பங்குபற்றி வெற்றிகளைப் பெறுவது ஒப்பீட்டளவில் குறைவாகத்தான் காணப்படுகிறது. அத்தோடு சிறு வயதிலிருந்தே

பயிற்சி வயது காணாமலிருக்கிறது. சர்வதேச ரீதியில் பங்குபற்ற வேண்டுமெனில் கிட்டத்தட்ட 10,000 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட பயிற்சிகளைப்

பெற்றிருந்தால்தான் நல்ல பெறுதிகளைப் பெற முடியும். அந்த 10,000

மணித்தியாலங்கள் பயிற்சிகளைப் பெற குறைந்தது 10 தொடக்கம் 12 வருடங்கள்

தொடர்ச்சியாக பயிற்சிகளைப் பெற வேண்டும். அவ்வாறு பயிற்சிகளைப் பெற்றால் உயர் திறனை காட்டக் கூடிய நிலைக்கு வருவார்கள். அவ்வாறான நிலைக்கு

வந்தால் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள், ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் வெல்லக் கூடிய நிலைக்கு வருவார்கள்.

அந்த நிலைக்கு வருவதற்கு தொடர்ச்சியாக கடந்த காலங்களில் பயிற்றுவிப்பாளர்கள் காணப்படவில்லை. தற்போது அந்த நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது.

பாடசாலைகளுக்குப் பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதன் பின்னர் எமக்கான சந்தர்ப்பங்கள் கூடுதலாக வருமென நம்புகிறோம்.  

கே; சர்வதேசப் போட்டிகளில் எமது வீர வீராங்கனைகள் பங்குபெறவேண்டுமெனில் என்ன அடிப்படை தேவைகள் உள்ளன?  

 ப: குறிப்பாக சொல்லவேண்டுமெனில் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்ட மைதானங்களிலும் விளையாட்டுப் பயிற்சி தொகுதிகள்

அமைக்கப்பட வேண்டும். சில விளையாட்டுத் தொகுதிகள் அமைக்கப்பட்டால்  

மட்டும் போதாது, பயிற்சிகளைச் சரியான முறையில் வழங்கக் கூடிய தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவேண்டும். நியமித்தால் மட்டும் போதாது.

மாகாண விளையாட்டு திணைக்களம், தேசிய விளையாட்டு திணைக்களம் போன்றவற்றினூடாக நேர்த்தியான தொடர்ச்சியான திட்டங்கள் முன்னெடுக்க 

வேண்டும். அதேவேளை இவற்றை தொடர்வதற்கு ஏற்ற ஊழியர்கள் நியமிக்கப்படவேண்டும். அவ்வாறு செய்தால் சர்வதேச ரீதியில் எமது வீரர்கள்

வெற்றி பெறக்கூடிய நிலை உருவாகும். தெற்காசிய ரீதியில் பார்க்கும் போது நான்கு அல்லது ஐந்து தமிழ் வீர, வீராங்கனைகள் மட்டுமே பங்குபற்றியிருக்கிறார்கள்.

அதை விட தகுதியான வர்கள் உள்ள போதும் அவர்கள் அதற்குரிய பயிற்சிகளை பெற்றுத் தங்களைத் தயார் செய்யவில்லை.  

கே;பூப்பந்தாட்டம் வடக்கில் எவ்வாறான நிலையில் காணப்படுகிறது?  

 ப: பூப்பந்தாட்டத்தை பொறுத்தளவில் தேசிய ரீதியில் கவனத்தையீர்க்கக் கூடிய நிலையை கடந்துள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் வீரர்கள் பங்குபற்றி போட்டிகளை நடாத்தக் கூடிய நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

ஆனால், இருந்த போதும் போதியளவு வசதிகளடங்கிய உள்ளக விளையாட்டு அரங்கங்கள் இல்லை.

காணப்படும் அரங்குகள் கூட விளையாடக் கூடிய நிலையில்லை. ஏனனெனில் சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது சிந்தெட்டிக்

கார்ப்பெட்டில்தான்(செயற்கை விரிப்பு) விளையாட வேண்டும். எங்களிடம் உள்ளவை, சில மரத்திலும், சில சீமெந்து நிலத்திலுமுள்ளன. அவை கூட நல்ல

நிலையில்லை. அவற்றை நல்ல முறையில் திருத்தி அமைத்து வீரர்களுக்கான தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்குவதன் மூலம் நாம் அடுத்த நிலைக்கு செல்ல

முடியும். தற்போதைய நிலையில் தேசிய ரீதியில் போட்டிகளில் பங்கு பற்றுவது அதிகரித்து காணப்படுகிறது. இன்னும் ஓரிரு வருடங்களில் நாங்கள் தேசிய ரீதியில் நல்லதொரு இலக்கை எட்ட முடியும்.  

கே;விளையாட்டுத் தொடர்பாகவும், விளையாட்டு அபிவிரு த்தி தொடர்பாகவும், வளர்ந்து வருகின்ற வர்களுக்கும், பெற்றோருக்கும், இந்த சமூகத்துக்கும் பயிற்று விப்பாளர் என்ற அடிப்படையில் என்ன சொல்கிறீர்கள்?  

 ப: விளையாட அனுப்புவதன் மூலம் உடல், உள ஆரோக்கியம் போன்றவற்றில் நல்ல நிலையை அடைய முடியும். எங்களது பூப்பந்து துறையில் பயிற்சிகளைப் பெற்றவர்கள் வைத்தியர் களாக, பொறியிலளாளர்களாக காணப்படுகிறார்கள்.

அதே போன்று அந்த துறைகளில் கல்வி கற்றும் வருகிறார்கள். பெற்றோர்களே நீங்கள் விளையாட்டுக்கு அனுப்புவதன் மூலம் உங்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படாது. அவர்களின் மூளை சீராக இயங்கி நல்ல முறையில் இயங்கும்.

எனவே, தினமும் விளையாட்டு பயிற்சிக்கென ஒரு நேரத்தினை ஒதுக்கி விளையாட்டில் பங்குபற்றுவதற்கு அனுப்பவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.  

 விளையாட்டுகளில் பங்குபற்றும் வீர,வீராங்கனைகள் சிந்திக்க வேண்டும். பயிற்றுவிப்பாளர்கள் தாங்கள் எவ்வாறு பயிற்சிகளை வழங்கி வீரர்களைத் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் வெற்றி பெறச் செய்யும் நோக்கில் வீர,

வீராங்கனைகளை உருவாக்க வேண்டும். வேலை கிடைத்து விட்டது. நேரத்துக்கு கடமைக்கு வேலையினை செய்தால் போதுமென்ற நிலை மாறவேண்டும்.

விளையாட்டு ஆர்வலர்கள் விளையாட்டை பார்ப்பது, ரசிப்பது விமர்சிப்பது என நின்றுவிடாமல் ஈடுபாட்டுடன் வீரர்களுக்கும், பயிற்றுவிப் பாளர்களுக்கும் நல்ல

வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஒட்டு மொத்த சமூகமும் யோசிக்க வேண்டும். களத்தில் இறங்கி உழைக்க வேண்டும்.  

 சமூகம் என பார்க்கும் போது முகாமைத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசியல் பதவிகளில் உள்ளவர்கள், உயர் பதவிகளில் உள்ளவர்கள், விளையாட்டுத்துறை 

சார்ந்த பதவிகளில் உள்ளவர்கள் அனைவரும் ஒரு திட்டத்தை வகுத்து செயற்படவேண்டும். ஒட்டுமொத்த வலையமைப்பும் மாற்றப்பட்டு, அனைவரும்

நேர்த்தியாக ஒரு குறிக்கோளுடன் செயற்பட்டால் தேசிய ரீதியையும் தாண்டி, சர்வதேசம் நோக்கி தமிழராகிய நாம் செல்ல முடியும். ஆனால் அது சாத்தியமா?  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .