2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘பாதிப்புகளை உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 நவம்பர் 12 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில், சமீபத்திய சீரற்ற வானிலையால் விவசாயத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளை, விவசாயிகள், உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டுமென, மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சலீம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று (12) தெரிவித்ததாவது, சில நாள்களாக நீடித்த அடைமழையும் பெருவெள்ளமும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே, விவசாயிகள், தாமதிக்காது தமது இழப்புகள் பற்றிய விவரங்களை முறைப்படி சமர்ப்பிக்க வேண்டுமென்றார்.

அத்துடன், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஒரு கடிதம் மூலம் அறிக்கையிட வேண்டுமென்றும் கிராம சேவையாளரிடத்திலும் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யலாம் என்றும், பின்னர் விவசாயப் போதனாசிரியர்கள் மூலமாக இழப்புகளை உறுதிப்படுத்தி கமநல சேவை நிலையத்திலும் அறிவிக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இழப்புகளை ஈடு செய்வதற்கான நிவாரணங்களாக உள்ளீடுகளையோ, விவசாய உபகரணங்களையோ, மானியங்களையோ அல்லது இழப்பீட்டுத் தொகையையோ பெறுவதற்கு விவசாயிகள் தமக்கேற்பட்ட இழப்புகள் சம்பந்தமான தகவல்களைத் துல்லியமாக உறுதிப்படுத்தி வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனைத்தொடர்ந்தே, இந்த விவரங்களைத் தொகுத்து மாவட்டச் செயலகத்துக்கும் பின்னர் கமத்தொழில் அமைச்சுக்கும் சமர்ப்பிக்க, விவசாய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .